/* */

ராஜமவுலியின் புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்

Deepika Padukone next movie with director Rajamouli - ராஜமவுலியின் அடுத்து வரும் புதிய படத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ராஜமவுலியின் புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்
X

தீபிகா படுகோன், மகேஷ் பாபு

Deepika Padukone next movie with director Rajamouli - ராஜமவுலியின் அடுத்து வரும் புதிய படத்தில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பிரபாஸுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு, எஸ்.எஸ்.ராஜமவுலியின் புதிய படத்தில் தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகனைப் பொறுத்தவரை, ராஜமவுலியின் அடுத்த படம் நடிகர் மகேஷ் பாபுவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இப்படத்தை ராஜமவுலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத்தின் நிஜ வாழ்க்கை சம்பவங்களால் உருவாவதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக 'SSMB29' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஒரு சாகச திரைப்படமாக இருக்கும். இது 2023ம் ஆண்டிலேயே திரைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த தகவல் உண்மையானால், தீபிகாவும் மகேஷும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். ஒரு சுவாரஸ்யமான ஜோடி களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

deepika padukone ss rajamouli

இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனின் ரசிகர்கள் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பாளர்கள் வெளியிட காத்திருக்கும் அதே வேளையில், 'புராஜெக்ட் கே' பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் கோவிட் -19 தொற்று நோயால் ஒரு வருடம் தாமதமானது. நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தயாரிப்பாளர்கள் இரண்டு ரிலீஸ் தேதிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தயாரிப்பாளர் அஷ்வினி தத் கூறியபடி, 2023ம் ஆண்டு அக்டோபர் அல்லது 2024ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி வாய்ப்புகள் உள்ளன.

deepika padukone news

தீபிகா படுகோன் அடுத்ததாக பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தில் அவரது 'தேசி பாய்ஸ்' இணை நடிகர் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சனுடன் ராபர்ட் டி நீரோ மற்றும் அன்னே ஹாத்வேயின் தி இன்டர்ன் ரீமேக் படங்களும் அவரிடம் உள்ளது. இதனிடையே ராஜமவுலியின் படமான மகேஷ் பாபு நடிக்கும் 'SSMB28' என்ற படத்தை எதிர்நோக்கியுள்ளார். இந்த படம் வித்தியாசமான கான்செப்ட் கொண்ட பொழுதுபோக்காக இருக்கும். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். 'அத்தாடு', 'கலேஜா' படங்களுக்குப் பிறகு மகேஷ் பாபுவும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸும் மூன்றாவது முறையாக இணையும் படம் இது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக தீபிகா படுகோனின் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 Oct 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  6. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  9. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!