/* */

போட்டியாளர் 'ஷூ'வில் ப்ளூடூத் - பிக்பாஸ் வீட்டுக்குள் 'திடுக்' விதிமீறல்

BiggBoss Contestant Using Bluetooth - பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளரின் 'ஷூ'வில், ப்ளூடூத் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விதிமீறல், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

HIGHLIGHTS

போட்டியாளர் ஷூவில் ப்ளூடூத் - பிக்பாஸ் வீட்டுக்குள் திடுக் விதிமீறல்
X

Blue Tooth in Bigg Boss house -  விதிமீறிய போட்டியாளர் மணிகண்டன் மீது நடவடிக்கை பாயுமா?

BiggBoss Contestant Using Bluetooth - பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் முக்கிய போட்டியாளர் ஒருவரின் ஷூவில், ப்ளூ டூத் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து, பிக்பாஸ் குழுவினர் பரிசோதனை செய்ததாக மைனா பேசிய வீடியோ தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது சீசன் கடந்த மாதம் மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை, சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இல்லாமல், மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து, 'எலிமினேட்' செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

முதல் வாரத்திலேயே, தன்னுடைய மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இருந்த ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேறுகிறேன் எனக் கூறினார். இவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார், பின்னர் அசல் கோளாரும், இவரைத் தொடர்ந்து செரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். மொத்தம் 21 பேரில், 5 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் 16 பேர் வீட்டுக்குள் இருக்கின்றனர்.


போட்டியாளர்கள் குறைந்து கொண்டே சென்றாலும், பிரச்னைகள் மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கின் போது, முறைகேடாக விளையாடி வெற்றி பெற்ற தவறை சுட்டிக்காட்டி, தனலட்சுமியை... தொகுப்பாளர் கமலஹாசன் வெளுத்து வாங்கினார். இதற்காக தனலட்சுமி பாத்ரூமில் கதறி கதறி அழுதார். பிக்பாஸ்சிடம் அழுது புலம்பிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி, வைரலானது.

நேற்று முதல், பிக்பாஸ் வீடு, அரசர் கால மியூசியமாக மாறி வருகிறது. ராஜா, ராணி, இளவரசி, படைத்தளபதி கெட்டப்களில், போட்டியாளர்கள் இனி வலம்வர உள்ளனர். இந்த புதிய டாஸ்க்கிற்கு தயார் ஆகி வருகின்றனர் போட்டியாளர்கள். இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கும், மணிகண்டன் தன்னுடைய ஷூவில் ப்ளூடூத் இருப்பதாக கூறியதை தொடர்ந்து, அவரது ஷூவை பிக்பாஸ் குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர்.


இதுகுறித்து மைனா நந்தினி, 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் எவ்வித வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் இது போன்ற பொருட்களை கொண்டு வரக் கூடாது என்பதே நிபந்தனை ஆகும். இதனை மீறும் விதத்தில் ப்ளூடூத் பொருத்தப்பட்ட ஷூ வை மணிகண்டன் உள்ளே எடுத்து வந்தது விதிமீறல் என்பதால், அவர் வெளியேற்றப்படுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 10:04 AM GMT

Related News