/* */

BBT7 பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ!

BBT7 பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

BBT7 பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ!
X

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. வெற்றிகரமாக 6 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 7வது சீசன் எப்போது துவங்கும் என தேதி அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சி புரோமோவை வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் ரசிகர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை தூண்ட முயற்சி செய்து வருகிறது நிகழ்ச்சி தரப்பு.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஒளிபரப்பாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இதற்கான புதிய ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. புரோமோவில் தோன்றிய கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல எடிட் செய்யப்பட்டிருந்தது புரோமோ.

கமல்ஹாசனே தோன்றி பேசியுள்ள இந்த புரோமோவில் பிக்பாஸ் வீட்டுல ஆளுங்கள விட்டா வீடு ரெண்டாகும்னு சொல்வாங்க ஆனா இப்ப நிஜமாவே ரெண்டு வீடாகிடிச்சு என்கிறார். அதாவது இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகளில் கண்டெஸ்டன்ட்கள் இருப்பார்களாம்.

முதல் வீட்டில் சின்னத்திரை பிரபலங்கள், சமூக வலைதள பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்முனைவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இரண்டாவது வீட்டில் புதிய முகங்கள் கலந்துகொள்வார்கள். பொதுமக்களிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் பலருக்கும் தெரியாத நபர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இரண்டு வீடுகளுக்கும் தனித்தனி வீட்டுத் தலைவர் இருப்பார். இரு வீடுகளுக்கும் இடையே போட்டிகள் நடத்தப்படும். அந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீடுகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும் உள்ளிட்ட நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த புதிய மாற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வீடுகள் என்றால் இரு குழுக்களுக்கிடையே நடக்கும் சண்டைகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் புதிய புதிய மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இந்த முறை இரண்டு வீடுகள் என்ற மாற்றம் நிகழ்ச்சியின் தரத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் தோன்றி நடித்துள்ள 2 ப்ரோமோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான 2 வது புரோமோவில், உலக நாயகன் டபுள் ஆக்க்ஷனில் தோன்றியிருந்தார். இந்த முறை இரண்டு வீடு என்று கூறி 2 பிக்பாஸ் வீடுகளில் போட்டியாளர்கள் விளையாட போவதை உறுதி செய்தார். ஆனால் அதிலும் மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்து வருகிறது. இதுகுறித்து பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் இது குறித்து தான் கமல் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் பேசியுள்ளார்.

ஒரு கமல், இந்த முறை ரெண்டு வீடுனா... ஒரு வீடு சின்னதா இருக்குமோ, இரண்டு வீட்லயும் 10 - 10 பேர சரி பாதியா பிரிச்சுடுவீங்களா என கேள்வி கேட்க, அதற்கு மற்றொரு கமல், ஒரு Clue கொடுத்தா பிரிச்சு மேஞ்சிடுவீங்களே என கூறி, இந்த புரோமோவில் பேசியுள்ளார். கமல்ஹாசனின் இந்த புதிய புரோமோ நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

Updated On: 2 Sep 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு