/* */

வித்அவுட் மேக்கப்..! பிக்பாஸால் எழுந்த பிரச்னை..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் இன்றைய நாள் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

வித்அவுட் மேக்கப்..! பிக்பாஸால் எழுந்த பிரச்னை..!
X

பிக்பாஸின் இன்றைய நாள் புரோமோவில் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்படுகிறது. வெயிட்டு பார்ட்டி எனும் டாஸ்கை மாயா படித்து காட்டுகிறார். இந்த டாஸ்கில் தோற்றால் வித்அவுட் மேக்கப்பில் இருக்க வேண்டும் என சொல்ல, அதன்படி புதிய பூகம்பம் வீட்டில் வெடிக்கிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். அதே நேரம் கலகலப்பாக செல்லும் வகையில் சில டாஸ்களுக்காக கேமைத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர்களுக்கு குட்டி பாஸ் ஒருத்தர் இருக்கிறார். இதனால் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு வீட்டில் 6 பேர், இன்னொரு வீட்டில் 12பேர் என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பிக்பாஸை தொடங்கியுள்ளார் பிக்பாஸ்.

புரோமோ 1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாள் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் புதிய டாஸ்க் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார் மாயா கிருஷ்ணன். வெயிட்டு பார்ட்டி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்க், பட்ஜெட்டுக்காக நடத்தப்படுகிறது.

இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் தோற்றவர்களிடமிருந்து எடுத்துச் செல்லப்படும்.

ஒவ்வொருத்தரும் தன் எடைக்கு நிகரான ஒரு பொருளை வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து அதை தராசில் வைத்து எடைக்கு எடையாக நிற்க வேண்டும் என்பது டாஸ்க்.

அதை செய்து முடித்தார்களா? இல்லையா என்பதுதான் இன்றைய எபிசோடில் நடக்கும் கதை..

புரோமோ 2


இப்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் மீண்டும் பிரதீப் ஆண்டனி ஏதோ சொல்ல அது பெண்களுக்கு எதிரானதாக அமைகிறது. இதனால் பெண்களிடையே எதிர்ப்பை சந்திக்கிறார் பிரதீப். ஒன்றாக ஆட வேண்டிய ஆட்டத்தில் தோற்பது எனக்கு பெனிஃபிட்தான் என்று பேசியிருக்கிறார் பிரதீப். இதனை பூர்ணிமா ஒப்பனை அறையில் சொல்ல, அனைவரும் பிரதீப் மீது கோபத்தை திருப்புகின்றனர்.

2 மணி நேரம் மேக்கப் போடுறீங்க என்றும் அவர் சொல்லியிருக்கிறார் போல. இது எனக்கு பிடிக்கவில்லை என்று மாயா சொல்கிறார். இதனால் பெண்கள் அனைவரும் மேக்கப் ரிமூவ் செய்துவிட்டு இன்று முழுக்க மேக்அப் இல்லாமல் இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

Updated On: 5 Oct 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...