/* */

பிக்பாஸ் 'வின்னர்' இவரா?

bigg boss Tamil 6 shivin-'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்துள்ள நிலையில், சில முக்கிய போட்டியாளர்கள் 'வின்னர்' ஆக வாய்ப்புள்ளதாக, கருத்து கணிப்புகள் வைரலாக துவங்கி விட்டது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வின்னர் இவரா?
X

bigg boss Tamil 6 shivin- இந்த முறை பிக்பாஸ் டைட்டில் வின்னர் குறித்த கருத்து கணிப்புகள், வைரலாகி வருகிறது. 

bigg boss 6 title winner, bigg boss Tamil 6 shivin- விஜய் டிவியில், கடந்த 2017ல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி துவங்கியது. இதில் டைட்டில் வின்னர்களாக முதல் சீசனில் ஆரவ் (சமீபத்தில் வெளியான 'கலகத்தலைவன்' படத்தின் வில்லன்) வெற்றி பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களில் முகின், ரித்விகா, ஆரி, கடந்த 2021 சீசனில் ராஜூ ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில், ரித்விகா மற்றும் ராஜூ ஆகியோரது டைட்டில் வெற்றியை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மற்ற போட்டியாளர்கள் 'டாஸ்க்' களில் தீவிரம் காட்டி, மோதிக்கொண்ட நிலையில், இவர்கள் சீசன் முழுவதும் அமைதியாக இருந்துகொண்டு வெற்றி பெற்றது, 'பிக்பாஸ்' ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தது.


எனினும், 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்பதே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் என்பதால், இதை ரசிகர்கள் விருப்பமின்றி ஏற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 6 துவங்கி, 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வெளியேறி உள்ளனர். முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட ஜிபி முத்து, அவராகவே விருப்பம் தெரிவித்து முதல் ஆளாக, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் ஏழு பேர் வெளியேறி உள்ளனர்.


இப்போது அசீம், கதிரவன், விக்ரமன், ஏடிகே, மணிகண்டன், அமுதவாணன், ராமு, தனலட்சுமி, ஆயிஷா, மைனா நந்தினி, ஜனனி, குயின்சி, ரக்சிதா, ஷிவின் ஆகிய 14 பேர், ஆண், பெண் போட்டியாளர்கள் தலா 7 பேர் வீட்டுக்குள் உள்ளனர்.

இந்த வாரத்தில், தற்போது விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் 'டாஸ்க்'கில் சண்டைகள், வாக்குவாதம் என பலவிதமான கூச்சல்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் நேற்று ஒளிபரப்பான எபிசோடில், பல சண்டைகள் நடந்தது.

50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், இதுவரை 50 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில், மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ள ஷிவின், டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளது என கூறி வருகிறார்கள்.


அதே போல் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களாக ஷிவின், அசீம், தனலட்சுமி, அமுதவாணன், கதிர் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். விக்ரமன் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் இருப்பதால், ஒருவேளை அவர் கூட டைட்டில் வின்னராக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தனலட்சுமியின் 'ஓவரான' ஆட்டங்கள்,ரசிகர்களின் ஒரு தரப்பினரை முகம் சுளிக்கவும் எரிச்சலடையவும் செய்கிறது என்பதும் மறுக்க முடியாது.

Updated On: 1 Dec 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...