/* */

'பிக்பாஸ்' வீட்டை விட்டு 'பறக்க' போவது இவரா?

bigg boss tamil 6 myna - இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து 'மைனா' நந்தினி வெளியேற்றப்பட உள்ளதாக, தகவல் பரவி வருகிறது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டை விட்டு பறக்க போவது இவரா?
X

 bigg boss tamil 6 myna- பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்.

this week bigg boss 6 elimination, bigg boss tamil 6 myna- தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், பிக்பாஸ் சீசன் நடந்துகொண்டிருக்கிறது. மொழிகள் மாறுபட்டாலும், இந்நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் குறையவில்லை. குறிப்பாக, தமிழ் ரசிகர்களுக்கு சம்மர் லீவ் சீசன் போல, பிக்பாஸ் சீசனும் ஆண்டுதோறும், வழக்கமாகி விட்டது. இந்த நுாறு நாட்களும் மிக ஆர்வமாக, நிகழ்ச்சியை கண்டுகளிப்பதோடு, வாரம்தோறும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை வீட்டிலேயே தங்க வைக்க, ஓட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.


விஜய் டிவியில் தமிழில் பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகிறார்கள். சாந்தி, அசல் கோளார், நிவாஷினி, மகேஸ்வரி, ஷெரீன், ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் குறைந்த ஓட்டுகளை பெற்றதால், வெளியேற்றப்பட்டனர். முதலில், வெளியேறிய ஜிபி முத்து, அவராகவே முன்வந்து, குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார்.

இந்த வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்சன் லிஸ்ட்டில் உள்ளது. யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை அறிய மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர், அது கமல்ஹாசன் கையில் மட்டுமே உள்ளது.

இந்த வாரம் எலிமினேஷனுக்கு கதிரவன், ஜனனி, ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் லிஸ்ட்டில் உள்ளார்கள். தற்போது உள்ள தகவலின்படி, மைனா மற்றும் குயின்ஸி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் இருவருமே டபுள் எவிக்சனில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது, என்கின்றனர்.


பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை வாரந்தோறும் அசீம் எலிமினேஷன் லிஸ்ட்டில் வந்தாலும், அவர் முதல் ஆளாக காப்பாற்றப்படுகிறார். காரணம், வீட்டுக்குள் எந்த விஷயம் நடந்தாலும் அதில் தனது கருத்துகளை முன்வைப்பதோடு, சண்டையும் செய்வார். அதுபோல, தனலட்சுமியும் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதாவது செய்து கொண்டே இருப்பதால், அவரும் பார்வையாளர்களால் கவனிக்கப்படுகிறார். ஆனால், இவர்கள் இருவருமே டைட்டில் வின்னராக வெற்றி பெற வாய்ப்பில்லை. நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்துவதற்காக மட்டுமே இவர்கள், இன்னும் வீட்டில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


கதிரவன், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோரது நடவடிக்கைகளை பலரும் விரும்பி ரசிக்கின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவர் டைட்டில் வின்னராக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மணிகண்டன் நல்ல போட்டியாளராக இருந்தாலும், பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை அவர் பெற்றதாக தெரியவில்லை. எனவே, வரும் வாரங்களில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில், இந்த வாரம் மைனா நந்தினி, குயின்சி இருவரில் ஒருவர் அல்லது இருவருமே வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Updated On: 1 Dec 2022 8:39 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...