/* */

பிக்பாஸ் சீசன் 6 : ஐந்து போட்டியாளர்கள் உறுதி, தொகுத்து வழங்கப்போவது யார்?

பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளார்களாம். மேலும் ஒரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் சீசன் 6 : ஐந்து போட்டியாளர்கள் உறுதி, தொகுத்து வழங்கப்போவது யார்?
X

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவிருக்கிறது. முந்தைய 5 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் பிக் பாஸ் 6வது சீசனை கமல் அல்ல மாறாக சிம்பு தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று பேச்சு கிளம்பியது.

ஆனால், பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை கமல் தான் தொகுத்து வழங்குவார் என நம்பத் தகுந்த தகவல் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் மேடையில் கமலை பார்க்கத் தான் பார்வையாளர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களில் 5 பேர் உறுதி செய்யப்பட்டு விட்டார்களாம். இசையமைப்பாளர் டி இமானின் முன்னாள் மனைவி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டுள்ளது. சூப்பர் சிங்கர் செந்தில் மனைவி ராஜலட்சுமி, பாடகி சுசித்திராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், டிடி என்கிற திவ்யதர்ஷினி ஆகியோர் கலந்து கொள்வது கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாம்.

இது தவிர மேலும் ஒரு தகவல் கசிந்தது. அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணனை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பினால், வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.

விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து கமல் சம்பளமாக . ரூ. 130 கோடிக்கு மேல் வாங்குவதாக கூறப்படும் நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு எத்தனை கோடி சம்பளம் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.

Updated On: 13 Aug 2022 9:25 AM GMT

Related News