/* */

Bigg Boss Season 6 Tamil: வைரலாகும் பிக்பாஸ் ஜனனியின் கலாட்டா வீடியோ

அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? என்ற அவரது வீடியோ வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

Bigg Boss Season 6 Tamil: வைரலாகும் பிக்பாஸ் ஜனனியின் கலாட்டா வீடியோ
X

ஜனனியின் கலாட்டா வீடியோ 

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக ஜனனி அறிமுகப்படுத்தப்பட்டபோதே அவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாக ஆரம்பித்து விட்டது.

இன்னும் ஒரு லாஸ்லியாவாக இலங்கைப் பெண்ணான ஜனனியை அவரது ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.ஜனனியை இப்பொழுதே சின்ன த்ரிஷா, அடுத்த சாய்பல்லவி என்று பட்டம் கொடுத்து அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் இளம் போட்டியாளராக களம் இறங்கியுள்ள ஜனனி வீட்டிற்குள் போன நாளிலிருந்து பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வருகிறார். அவரைக் குறித்து கமெண்டுகளும் மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாக வலம் வர ஆரம்பித்துள்ளது.கண்டிப்பாக எப்படியும் இறுதிப் போட்டி வரை ஜனனியை செல்ல வைத்து விட வேண்டும் என்று அவருக்கான ஆர்மி வேலை பார்க்கத் துவங்கி விட்டது.

பிக் பாஸ் போட்டியாளர்களிலேயே வயது குறைந்த போட்டியாளர் என்றால் அது ஜனனி தான்.

பொதுவாக இலங்கை தமிழர் என்றாலே தமிழர்கள் மத்தியில் தனியாக ஒரு மதிப்பு இருக்கும் அதுவும் அழகாக இருப்பவர் என்றால் சும்மா விடுவார்களா நம்ம நெட்டிசன்கள். தங்களது ஆதரவை கொட்டத் தொடங்கி விட்டனர். ஜனனியும் தன்னுடைய க்யூட்டான நடவடிக்கைகளால் தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பதற்கு தாம் ஏற்றவர் தான் என்று அவ்வப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் நிரூபித்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஒரு வீடியோ ஒன்றினைப் பதிவிட்டார்ர். இது ரசிகர்களிடையே வைரலானது. அதில், அனைவருக்கும் வணக்கம் நான் பிக்பாஸ் ஷோவுக்குள்ள போகப்போறன். எனக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் எனக்கு சர்ப்போட் பண்ணுங்க. நான் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களை நம்பித்தான் இந்த ஷோவுக்குள்ள போறன். நான் கொஞ்சம் சின்ன பிள்ளை ஏதாவது தப்பு பண்ணினால் மன்னிச்சுக் கொள்ளுங்க. முடிந்தவரை உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன் என்றும் தெரிவித்து வீடியோவை பதிவு செய்திருந்தார்

பிக்பாஸ் 6வது சீசனில் ஜனனி கலந்துகொண்டு மக்களின் மனதை வென்று வருகிறார். இலங்கையில் இருந்து வந்த இவர்மீது மக்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.


இந்த நேரத்தில் ஜனனி சில தலைப்புகளை வைத்து தான் நடித்த வீடியோக்கள் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜனனி ஆர்மி வெளியிட்ட குறும் திரைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. அதன்படி அவர் மருத்துவமனை குறித்து நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? என்ற அவரது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போல வீடியோக்களை ஜனனி ஆர்மியினர் வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்

Updated On: 2 Nov 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...