/* */

பிக்பாஸ் 6-வது சீசன் வீட்டில் சண்டை ஆரம்பித்து விட்டது- இனி கலக்கல் தான்

ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossபிக்பாஸ் 6-வது சீசன் வீட்டில் சண்டை ஆரம்பித்து விட்டது. இனி பார்வையாளர்களுக்கு கலக்கல் விருந்து தான் படைக்க போகிறார்கள்.

HIGHLIGHTS

பிக்பாஸ் 6-வது சீசன் வீட்டில் சண்டை ஆரம்பித்து விட்டது- இனி கலக்கல் தான்
X
ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossபிக்பாஸ் ஆறாவது சீசனில் கத்தி பேசி சண்டை போடும் ஆயிஷா.

பிக் பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பித்துவிட்டது. இனி கலக்கல் தான்.

ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossரியாலிட்டி ஷோ எனப்படும் தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த ஒன்பதாம் தேதி துவங்கியது. உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் ஆக இருந்து போட்டியை நடத்தி வருகிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த 20 போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து வைத்த பின் வீக்லி டாஸ்க் அசைன்மென்ட் கொடுத்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் கதை சொல்ல ஆரம்பித்தார்கள்.


ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossஇந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் மேலும் ஒரு அசைன்மென்ட் கொடுத்தார். அது என்ன என்றால் போட்டியாளர்கள் ஒன்று முதல் 13 வரை தங்களை வரிசைப்படுத்தி நின்று கொள்ள வேண்டும். இந்த போட்டியில் முதலில் வருபவருக்கு தங்க பதக்கமும் கடைசியாக வருபவருக்கு தங்க செயினும் வழங்கப்படும் என அறிவித்தார்.

ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossஅதன் அடிப்படையில் முதல் எண்ணில் மகேஸ்வரி நிற்க ஆறாவது எண்ணில் விக்ரமன், ஒன்பதாவது எண்ணில் ஆயிஷா நின்றார்கள். இந்த நிலையில் அசிம் ரிமார்க்ஸ் கொடுக்க ஆரம்பித்தார். முதல் இடத்தில் நிற்பதற்கு மகேஸ்வரிக்கு என்ன தகுதி இருக்கிறது என்றார். அதே போல் ஆறாவது இடத்தில் நிற்பதற்கும் தகுதி இல்லாதவர் விக்ரமன் என்று கூறியவர் ஒன்பதாவது எண்ணில் நிற்பதற்கு ஆயிஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என சாடினார்.

ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossஇதை கேட்டு ஆத்திரமடைந்த ஆயிஷா நீங்கள் என்ன என்னை தகுதி இல்லாதவர் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என கேட்டார் கோபமாக. உடனே அசிம் நீ தூங்குவதை தவிர வேறு என்ன செய்கிறாய் ஒன்றும் செய்வதில்லை என்று சத்தமாக கத்தி பேசினார். இதனால் மேலும் கோபமான ஆயிஷா எனக்கும் கத்த தெரியும். எனக்கும் வாய்ஸ் இருக்கிறது. நானும் கத்தி பேசுவேன், நீங்கள் தூங்குவது இல்லையா என எதிர் கேள்வி கேட்டார் . இப்படி வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் சண்டை வளர்ந்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அசிம் ஆயிஷாவை பார்த்து போடி உனக்கு தூங்குவதை தவிர ஒன்றும் தெரியாது என்றார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஆயிஷா நான் உங்களை மரியாதையாக தானே வாங்க போங்க என்று சொல்கிறேன். நீங்கள் எப்படி என்னை வாடி போடி என்று சொல்லலாம் என்று ஆவேசமாக கத்தினார். அத்துடன் நிற்கவில்லை அசிம் அடுத்து விக்கிரமனிடம் வம்பு இழுப்பது போல் சென்றார்.

ayesha vs azeem in bigg boss 6 house, ayesha in bigg bossவிக்கிரமனை பார்த்து நீ தூங்குவதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை என்றார். அதற்கு விக்கிரமன் நீ தான் தூங்குகிறாய் என்றார். ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசிக்கொள்ள அவர்களது சண்டை முற்றிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் வெள்ளை சட்டை போட்டால் நீ என்ன பெரிய அரசியல்வாதி என நினைப்பா என்ற அசிம் அத்துடன் நிற்காமல் போடா போய் வேலையை பார் என்றார். அதற்கு விக்ரமனும் பதிலடி கொடுக்க இரண்டு பேரும் வாக்குவாதம் பண்ணி கடைசியில் கை கலப்பாக கூடிய சூழல் ஏற்பட்டது. இந்த நேரத்தில் ஆயிஷாவும் இடையில் புகுந்தார். ஆக மூன்று பேருக்கும் சண்டை மூண்டது பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியில் சண்டை. இனி கலக்கல் தான் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையப் போகிறது.

Updated On: 22 Oct 2022 9:59 AM GMT

Related News