நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு- விழுந்து, விழுந்து சிரித்த போட்டியாளர்கள்

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funநீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடடில் போட்டியாளர்கள் விழுந்து. விழுந்து சிரித்ததற்கான காரணத்தை அறிய தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு- விழுந்து, விழுந்து சிரித்த போட்டியாளர்கள்
X
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விழுந்து ,விழுந்து சிரித்த காட்சி.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஉலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசன் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கியது.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஇந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடலிஸ்ட் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் , மாடல் ஷெரினா, தொகுப்பாளினி இலங்கை ஜனனி, அமுதவாணன், வி.ஜே. மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா, மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி, அரவிந்த், வி.ஜே. விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஇவர்களுள் பலரையும் கவர்ந்த ஜி.பி. முத்து முதலிலேயே தனது உடல் நலத்தை காரணமாக கூறி வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக 'மெட்டி ஒலி' சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல் கோலார், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி இருந்த காட்சி.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஇந்த டாஸ்க்கின்படி பலரும் தங்களுக்கு சரியில்லை எனத் தோன்றும் விஷயங்கள் குறித்து வழக்கு தொடுக்க, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனலட்சுமி அசீம் மீது புதிய வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். அதில், அசீம் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் பழங்களை தானே எடுத்து சாப்பிட்டு விடுவதாகவும் அதனை விசாரிக்கும்படியும் கூறியிருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் அசீமின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

விழுந்து விழுந்து சிரித்த போட்டியாளர்கள்.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funஅதில் தனலட்சுமி தொடுத்த வழக்கில் மைனா நந்தினி நீதிபதியாக செயல்படுகிறார். அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது, தனலட்சுமிக்காக ஆஜராகும் கதிரவன்,"இரவு நேரத்தில் பழங்கள், தயிர் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு விடுகிறார். மற்றவர்களுடையதையும் எடுத்து சாப்பிடுறாரு, அதுதான் இங்க கேஸ்" என்கிறார். இதை கேட்டு நீதிபதியாக இருக்கும் மைனா உட்பட பலரும் சிரித்துவிடுகின்றனர்.

bigg boss tamil 6 court task, bigg boss 6 tamil azeem case inquiry funதொடர்ந்து, அசீமுக்காக ஜனனி வாதாடுகிறார். அப்போது,"அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என் கட்சிக்காரர்?" எனச் சொன்னதும் அசீமே சிரித்துவிடுகிறார். தொடர்ந்து,"பழங்கள் வீணாக போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே அவர் அப்படி செய்தார்" என்கிறார். இதைக்கேட்டு மொத்த நீதிமன்றமும் கலகலத்துபோகிறது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி இருந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் ராஜா, ராணி, இளவரசி என வேடம் போட்டு இருந்தனர். இந்த சூழலில் தான் அனைவரையும் சிரிக்க வைத்த கோர்டு சீன் அரங்கேறி இருக்கிறது.

Updated On: 25 Nov 2022 11:46 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  கொலம்பியா நிலச்சரிவு: உயிரிழந்த 34 பேரில் எட்டு சிறுவர்கள்
 2. தென்காசி
  தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருகை: பாதுகாப்பு குறித்து தென்மண்டல...
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
 4. திருவில்லிபுத்தூர்
  தொடர் மழை: சதுரகிரிமலை சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல...
 5. தொழில்நுட்பம்
  எலோன் மஸ்க் பயன்படுத்தவுள்ள நியூராலிங்க் தொழில்நுட்பம் என்றால்
 6. விளையாட்டு
  உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
 7. திருவண்ணாமலை
  கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார்...
 8. திருவண்ணாமலை
  அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
 9. இந்தியா
  சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள்...
 10. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை...