/* */

லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்

Bigg Boss Actor And Actress in Thalapathy 67 - லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்
X

இயக்குனர் லோகேஷுடன் விஜய்.

Bigg Boss Actor And Actress in Thalapathy 67 - லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத் திரைப்படத்துறையில் பிரபலமான இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக உள்ளவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2016 ஆம் ஆண்டிலிருந்து மாநகரம், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி கொண்டு இருக்கிறார். இதனைத்தொடர்ந்து விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் அசுர வெற்றிக்கு பின்னர், தளபதி விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் இறுதிக்கட்ட ஸ்கிரிப்டிங் மற்றும் லொகேஷன் வேட்டையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

ரசிகர்களிடையே மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படக்குழு நடிகர் மற்றும் நடிகர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன், சமந்தா ரூத் பிரபு, ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் என ஆறு பேர் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

mynaa nandhini and raju in Thalapathy 67

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் 'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான நடிகை மைனா நந்தினி மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகிய இரு முக்கிய கேரக்டர்களுக்கு லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்துள்ளார் என்பது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே இயக்குனருடன் 'விக்ரம்' படத்தில் சிறிய வேடத்தில் பணியாற்றிய மைனா, தற்போது விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக் பாஸ் தமிழ்' 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அதேபோல் ராஜு ஜெயமோகன் கடந்த 5வது சீசனில் 'பிக் பாஸ் 5' வெற்றியாளராக இருந்தார்.

இதனிடையே இயக்குனர் லோகேஷ் தனது முந்தைய படங்களைப் போலவே பல நட்சத்திரங்களை வைத்து படத்தை பேக் செய்யப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் பிரபலங்களான மைனா மற்றும் ராஜு ஜெயமோகன் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவலால் அவர்களது ரசிகர்கள் படு குஷியில் இருந்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றியை, உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் 100வது நாள் விழாவாக கொண்டாட உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!