/* */

பிக் பாஸ் வீட்டில் இருந்து 'காதல் மன்னன்' ராபர்ட் மாஸ்டர் வெளியேறுகிறாரா?

bigg boss 6 tamil elimination- நாளை, பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரக்சிதாவுக்கு ‘நுால் விட்டுக்கொண்டு’ இருக்கும் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

பிக் பாஸ் வீட்டில் இருந்து காதல் மன்னன் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுகிறாரா?
X

 bigg boss 6 tamil elimination-இந்தவாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது ரக்சிதாவை ‘டாவடிக்கும்’ ராபர்ட் மாஸ்டராக இருக்கலாம் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

bigg boss 6 tamil elimination, bigg boss 6 tamil elimination today result, bigg boss tamil season 6 today elimination- சனிக்கிழமை வந்து விட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்ற பரபரப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விடுகிறது.

இந்த வாரம் ராம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேர ட்விஸ்ட் இந்த முறையும் நடைபெற்றுள்ளது.


ராமுக்கு திடீரென கடைசி நேரத்தில் அதிக ஓட்டுக்கள் கிடைத்து வரும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு கன்பார்ம் ஆக வெளியேற போறது இந்த போட்டியாளர் தான் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், வழக்கம் போலவே அசீம், 'நாமினேட்' செய்யப்பட்டார். அசீமை தொடர்ந்து கதிரவன், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்கள் 'நாமினேட்' செய்யப்பட்டனர். முகத்துக்கு நேராக 'நாமினேட்' நடந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பழிவாங்கும் படலங்களும் அரங்கேறின.


கடந்த வாரம் கதிரவன் முதலில் 'சேவ்' ஆனார். கடைசியாக விளிம்பு நிலைக்கு அசீம் தள்ளப்பட்டார். ஆனால், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் எல்லாம் அசீம்தான் அதிக ஓட்டுக்களை பெற்று இருந்தார். இந்நிலையில், இந்த வாரம் கதிரவன் முதலில் 'சேவ்' ஆவாரா? அல்லது இந்த வாரமும் அதிக ஓட்டுக்களுடன் அசீம் 'சேவ்' ஆவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அசீம், கதிரவன், தனலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்ட நிலையில் அவரது அண்ணன் மணிகண்டனும் இந்த வாரம் சேப் ஜோனுக்கு வந்துவிட்டனர். மணிகண்டன் கடைசியில் இருந்த நிலையில், திடீரென அவர் அதிக வாக்குகளுடன் மேலே வரக் காரணமே ஐஸ்வர்யா ராஜேஷ்தான் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


ஜனனியை அம்பாக பயன்படுத்தி விளையாடி வரும் அமுதவாணன், ரச்சிதா 'நோ' சொல்லியும் தொடர்ந்து ஜொள்ளு விட்டு வரும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் நீதிபதியாக இருந்தாலும், 'கேஸில் ஜெயித்தது இவங்க தான். ஆனால், நான் வெற்றியாளர் இவங்கன்னு சொல்றேன்,' என காமெடி செய்த 'நைட் டிரெஸ் பாய்' ராம் உள்ளிட்டோர் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.

இந்த வாரம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு தூங்கி ரெஸ்ட் எடுத்து வருகிறார் என ஆயிஷா உள்ளிட்டோர்களே கலாய்த்து வரும் ராம் தான் வெளியேறுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பிஆர் டீம் பயங்கரமாக வேலை பார்த்து விட்டதால், திடீரென கடைசி இடத்துக்கு கொஞ்சம் மேலே போய் விட்டாரே என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


ரச்சிதாவுடன் 'ரொமான்ஸ் செய்கிறேன்' என்ற பெயரில், கடந்த வார இறுதியில் ரசிகர்களை ரொம்பவே கடுப்பேற்றிய ராபர்ட் மாஸ்டருக்கு இந்த வாரம்' குட் பை' சொல்ல பிக் பாஸ் ரசிகர்கள் ரெடியாகி விட்டனர். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் இப்போதைக்கு, ராபர்ட் மாஸ்டர் தான் உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக யார் வெளியேறுவார் என்பது நாளை மாலை 'லீக்' ஆகிவிடும்.

Updated On: 26 Nov 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்