/* */

பிரபல சின்னத்திரை நடிகை அனுவிற்கு வளைகாப்பு

TV Actress Anu Baby Shower -பிரபல சின்னத்திரை நடிகை அனுவிற்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பிரபல சின்னத்திரை நடிகை அனுவிற்கு வளைகாப்பு
X

tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionசின்னத்திரை நடிகை அனு.

TV Actress Anu Baby Shower - சன் டிவியில் தற்போது பாண்டவர் இல்லம் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் பிரபல சின்னத்திரை நடிகை அனு. நடிகை அனு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் ஜீ தமிழ், சன் டிவி என பல தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionசீரியலில் இவரது வில்லத்தனமான நடிப்பை பார்த்து பலர் அவர் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தினர். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை தனமாக தான் இருந்து வருகிறார். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துருதுருப்பான கேரக்டரையும் ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்து ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionசின்னத்திரை நடிகையான அனு நிஜ வாழ்க்கையில் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அனு தொடர்ந்து சின்னத்திரை சீரியலில் நடித்து வந்தார். கணவனும் மனைவியும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவார். இதனால் சீரியலை தாண்டியும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionதிருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்த நடிகை அனு தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது 5 மாத கர்ப்பிணியான அனு தன்னுடைய வளைகாப்பு விழாவை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் சீரியலிலேயே மிக எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார்.


tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionஅத்துடன் அந்த விழா தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.அதில் கணவருடன் அவர் சேர்ந்து இருப்பது, மகிழ்ச்சியாக சிரிப்பது, கட்டிப்பிடிப்பது, வாழ்த்து தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன ‌.

tv actress anu baby shower, Sun Tv Serial Actress anu baby shower functionசமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ள காட்சிகளை பார்த்து சக நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சின்னத்திரைஉலகமே அவரை பாராட்டி வருகிறது. தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Oct 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி