/* */

மாணவன் அசீம் - மாணவி ரக்சிதா ; பள்ளிக்கூடமாக மாறிய 'பிக்பாஸ்' வீடு

azeem bigg boss, rachitha bigg boss- சில தினங்களாக, ‘பிக்பாஸ்’ வீடு, பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. போட்டியாளர்கள் மாணவ, மாணவியராக, ஆசிரியர்களாக மாறி, பார்வையாளர்களை அசத்தி கொண்டிருக்கின்றனர்.

HIGHLIGHTS

மாணவன் அசீம் - மாணவி ரக்சிதா ; பள்ளிக்கூடமாக மாறிய பிக்பாஸ் வீடு
X

azeem bigg boss, rachitha bigg boss- பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் - ரக்சிதா மற்றும் அசீம்.

azeem bigg boss, rachitha bigg boss- விஜய் டிவி படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, அடுத்த மாதம் ஜனவரி இறுதியில் முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.


பிக்பாஸ், இப்போது 70 நாட்களை தாண்டிவிட்டது, இதில் இருந்து பிரபலங்கள் 11 பேர் வெளியேறிவிட்டார்கள். வெளியேறியவர்களில், ஜிபி முத்து ஒருவரை தவிர மற்ற அனைவருமே மக்களால் தேர்வு செய்து வெளியேற்றப்பட்டவர்கள் தான். சாந்தி, அசல் கோளார், நிவாஷினி, மகாலட்சுமி, ஷெரீனா, ராம், குயின்ஸி, ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, கடைசியாக போன வாரம் ஜனனி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.


தற்போது அசீம், விக்கிரமன், அமுதவாணன், ஏடிகே, கதிரவன், மணிகண்டன், ரக்சிதா, தனலட்சுமி, ஷிவின், மைனா ஆகிய 10 பேர் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது, இதுவரை தெரியவில்லை. மைனா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில், அவர் பேச்சில், நடவடிக்கைகளில் போட்டி குறித்த அதிக அக்கறையோ, கவனமோ வெளிப்படுவதில்லை. உதாரணமாக, உலக நாயகன் கமல் பங்கேற்கும் சனி, ஞாயிறு நிகழ்ச்சிகளில் கூட, கமல் கேட்கும் கேள்விகளுக்கு கேலி, கிண்டலாக மைனா பதில் கூறுவதும், அவரது முன்பே, மற்ற போட்டியாளர்களை மிரட்டுவதும், அடிப்பதும், கேலி பேசுவதும், அவரது சேட்டைகளாக உள்ளது. மிக சாதாரண, காமெடி நடிகையான இவர், 50 ஆண்டுகால தமிழ் சினிமா உலகில், சாதனை நாயகனாக போற்றப்படும் நடிப்பு 'ஜாம்பவான்' ஆன கமல்ஹாசனிடம், மைனா அநாகரிகமாக நடந்துகொள்வது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பிடிப்பதே இல்லை. எனவே, மைனா இந்தவாரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.


அதனால், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மாறி மாறி ஓட்டுபோட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இப்போது இருப்பவர்கள் எல்லோருமே ஒரு விதத்தில், பார்வையாளர்களுக்கு பிடித்த போட்டியாளர்களாகவே உள்ளனர். அமுதவாணன், மைனா ஆகிய இருவரை தவிர மற்றவர்கள், இன்னும் சில வாரங்கள் வரை தாக்கு பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விக்கிரமன், அசீம், கதிரவன், ஷிவின், ரக்சிதா ஆகியோர், இறுதி வாரம் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. தனலட்சுமி நல்ல போட்டியாளராக இருந்தாலும், அவரது அடாவடி பேச்சும், மற்றவர்களை காயப்படுத்தி பேசும் அவரது குணமும் நிச்சயம் அவரை விரைவில், வீட்டுக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரச்சிதா மற்றும் அசீமா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இப்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் பள்ளி மாணவனாக அசீம், மீசை தாடி இல்லாமல், சின்ன பையனை போல காணப்படுகிறார்.


அதுபோல், ரக்சிதாவும், பாவாடை சட்டை அணிந்து, இரட்டை பின்னல் ஜடை உடன், சின்ன பெண் போல, காட்சியளிக்கிறார். ' கனா காணும் காலங்கள்' என்ற பள்ளிக்கூட 'டாஸ்க்'க்காக அவர்கள், தங்களது நடை, உடை, தோற்றங்களை மாற்றிக்கொண்டதால், ரசிகர்கள் அவர்களை வியந்து பார்த்து ரசிக்கின்றனர்.

Updated On: 22 Dec 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...