/* */

திரைப்படத் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்..!

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, ஏவிஎம் பட நிறுவனம் தயாரிப்புத் துறையில் இறங்கியது. முதற்கட்டமாக வெப் சீரிஸை தயாரிக்கிறது.

HIGHLIGHTS

திரைப்படத் தயாரிப்பில் மீண்டும் களமிறங்கும் ஏவிஎம் நிறுவனம்..!
X

ஏவிஎம் பட கம்பெனி.

திரைப்படத் தயாரிப்புத் துறையில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஏ.வி.எம் நிறுவனத்தின் மூன்றாவது தலைமுறை தற்கால சினிமாவுக்கு ஏற்றார்போல் அப்டேட்டாக, வெப் சீரிஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதற்கு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ் 1945ல் இருந்து படத் தயாரிப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வந்தது. இந்தநிலையில், 2014க்குப் பிறகு சினிமா தயாரிப்பிலிருந்து விலகியது. கடந்த எட்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஏ.வி.எம் நிறுவனம் படத்தயாரிப்பில் இறங்கியுள்ளது.

தற்போது முதலில் ஏ.வி.எம் நிறுவனம், 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற வெப் சீரிஸை தயாரித்துள்ளது. இதில் அருண்விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த வெப் சீரிஸை இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கிறார். இதன் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திரைத்துறைக்கு அச்சுறுத்தலாக இருந்து வருவதாக தயாரிப்பாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு வரும் பைரசி இணைய தளமான தமிழ் ராக்கர்ஸ் பற்றிய கதையாக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 July 2022 7:07 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து