/* */

அம்மாடியோவ்... உலகளவில் ரூ. 1500 கோடி வசூலித்த அவதார் 2

avatar total collection worldwide- 'அவதார் 2' திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 1500 கோடி வசூலித்த நிலையில், இந்தியாவிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது.

HIGHLIGHTS

அம்மாடியோவ்... உலகளவில் ரூ. 1500 கோடி வசூலித்த அவதார் 2
X

 avatar total collection worldwide - வசூலை அள்ளிக்குவித்து வரும் ‘அவதார் 2’

avatar 2 collection worldwide day 3, avatar total collection worldwide- தமிழகத்தில், இன்றைய சூழலில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், 'அவதார் 2' படத்தின் வசூல் வேட்டை பலமடங்காக தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'அவதார் 2' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1500 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு காணப்படுவதால் படத்தை திரையிட்டவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'அவதார் 2' திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 12 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாகம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தின் மீது சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனை பூர்த்தி செய்யும் அளவுக்கு படம் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில், 'அவதார் 2' படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று மட்டும் ரூ. 40.5 கோடி ரூபாய்க்கு வசூலைத் தந்திருப்பதாக கூறப்படுகிறது. 2 நாட்களில் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக அவதார் 2 வசூலித்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமையான நேற்றுடன் சேர்த்து இந்தப் படம் 3 நாட்களில் மட்டும்இந்தியாவில் ரூ. 125 கோடி வசூல்கிடைத்துள்ளது என மதிப்பிட்டுள்ளனர்.


தென்னிந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளமாநிலங்களில் அதிக திரையரங்குகளில் 'அவதார் 2' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தி பட வட்டாரங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பை, 'அவதார் 2' பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்தாண்டு நல்ல வசூலைக் கொடுத்த இந்தி படங்களான 'த்ரிஷ்யம் 2',' பூல் புலயா' படங்களை விடவும் இந்தி வட்டாரத்தில் 'அவதார் 2' படத்திற்கு வசூல் அதிகமாக உள்ளது.


உலக அளவில் இந்தப் படம் 2 நாட்களில் ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் ரூ. 3 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று சினிமா வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொருத்தளவில் பெரிய படங்கள் ரிலீஸாகாத நிலையில், 'அவதார் 2' படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா ரசிகர்களை பொருத்தவரை, வித்தியாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பான படங்களை விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக, சாகஸ காட்சிகள் நிறைந்த படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கின்றனர். அந்த வகையில், 'அவதார்' முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதால், இதன் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றிப்படம்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூலில் ஆயிரக்கணக்கில் கோடிகளை குவித்து வருகிறது.

Updated On: 19 Dec 2022 10:05 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு