/* */

பிக்பாஸ் சீசன் 6: அத்துமீறும் அசல் கோலார். முகம் சுளிக்கும் ரசிகர்கள்

Asal Kolaar Bigg Boss -பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அநாகரீகமாக அசல் கோலார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் சீசன் 6: அத்துமீறும் அசல் கோலார். முகம் சுளிக்கும் ரசிகர்கள்
X

முகம் சுளிக்க வைக்கும் அசல் கோலாரின் நடத்தை 

Asal Kolaar Bigg Boss -பிக் பாஸ் அசல் கோலாரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்தை அடைந்துள்ளது ஜிபி முத்து, அசீம், அசல் கோலார், விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர்,

இந்த நிகழ்ச்சிய தற்போது ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்துள்ளார். இந்த முறை நந்தினி விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் அசல் கோலார். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் குமார் என மாற்றிவைத்து இருக்கிறார். 'ஜோர்த்தாலே' என்ற பாடல் மூலம் பிரபலமான இவர், சந்தோஷ், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை எழுதி இருக்கிறார்.மேலும் சந்தோஷ் நாராயாணன் இசையில் குலுகுலு, மஹான் படங்களிலும், யுவன் இசையில் காஃபி வித் காதல் படத்திலும் பாடல்கள் எழுதி இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் 'லைஃப் ஆப் பேச்சுலர்' பாடலை எழுதி இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருக்கிறார். அதிலும் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளிலேயே ஆயிஷாவிடம் வாடா, போடா என்று பேச தேவையில்லை என்றெல்லாம் வம்பிழுத்தார்.


பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோலார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் நடந்துகொள்கிறார்.

குயின்சி, நிவாஷினியிடம் இவர் ஓவராக வழிந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலாருக்கு ஒரு கண். விக்ரமனுடன் குயின்சி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய கையை மாவு பிசைவது போல அசல் பிசைந்து கொண்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அசலை கண்டித்து பதிவு போட்டு இருந்தார்கள். பின் குயின்சி செட் ஆகவில்லை என நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை வறுக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமில்லாமல் நிவாசினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு கடலை போடுவது, மைனாவின் கையை பிடித்து தடவுவது, மகேஸ்வரியின் காலை தடவுவது என்று தன் தடவல் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் அசல்.


அசல் கோலார் மற்றும் நிவாஷினி இருவரும் காதலித்து வருவதாகவும் ஒரு கிசுகிசு எழுந்துள்ளது. அதற்கேற்றார் போல் இருவரும் சற்று நெருக்கமாகவே பழகி வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நிவாஷினி மற்றும் அசல் கோலார் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட அசல் நிவாஷினி மடியில் அமர்ந்து அவருடன் கொஞ்சி பேசி இருந்தார். இப்படி இவர் பெண்களிடம் அத்து மீறி நடந்துகொள்வது பலரை முகம் சுழிக்க வைத்து வருகிறது.

இதை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களுடைய கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இதனால் இவரை ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்த போது பார்ட்டி, கும்மாளம் என்று இருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் வெளியேயும் இவர் அப்படி தானா என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 6:17 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!