/* */

arjun acting as villain role in thalapathy 64 கைதி முதல் தளபதி 64 வரை வில்லன் ரோலில் அசத்தும் அர்ஜூன்

arjun acting as villain role in thalapathy 64 தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே கொடூர உருவம் கொண்டவராக இருப்பார் என்பதை நொறுக்கும் வகையில் ஒரு மெல்லிய உடல் சாயலைக்கொண்டவர் வில்லனாக தளபதி 64ல் நடித்துள்ளார் . அவர்தான் அர்ஜூன்,

HIGHLIGHTS

arjun acting as villain role in thalapathy 64  கைதி முதல் தளபதி 64 வரை  வில்லன் ரோலில் அசத்தும் அர்ஜூன்
X

தளபதி 64 வில்லன் அர்ஜீன்



arjun acting as villain role in thalapathy


தமிழ் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு ஒருசில நடிகர்கள் மட்டுமே பொருத்தமாக அமைவது அவர்களுடைய நடிப்பினாலா? அல்லது அவர்களால் அதை மட்டும் சிறப்பாக செய்ய முடியுமா? என்று ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு நடிப்பின் இமயமாக கேரக்டரோடு ஒன்றி நடிப்பதுதான் தமிழ் சினிமாவில் வரும் வில்லன்களின் குணாதிசயமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் மக்கள் திலகம் என போற்றப்பட்டு மக்களால் அன்றைய சினிமாவில் விரும்ப்பப்பட்ட ஒரேநடிகர் எம்ஜிஆர். இந்த மூன்றெழுத்து பல ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்தது. ஆனால் இவருடைய படத்தில் வில்லனாக நம்பியார் நடித்தால்தான் அந்த படம் அக்காலத்தில் வெற்றி பெற்றது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இருவரின் நடிப்பும் காம்பினேஷனும் ஒத்து போனதால் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் புது புது வில்லன்கள் அவதாரம் எடுக்கின்றனர். அதிலும் ஒரு சில வில்லன்களை ரசிகர்கள் ஏற்றும் கொண்டுள்ளனர். அந்த வகையில் கைதி திரைப்படத்தில் வில்லன் கேரக்டராக அறிமுகம் ஆன அர்ஜூன். தற்போது விஜய் நடிக்கும் தளபதி 64 படத்திலும் வில்லன் கேரக்டர் ஏற்று நடித்து வருகிறார்.

arjun acting as villain role in thalapathy 64வில்லன் என்றால் அந்த காலத்து நம்பியார், பிஎஸ்வீரப்பா , எஸ்ஏ அசோகன் போன்று இல்லை இவர். சாதாரண சாமான்ய உருவ அமைப்பில்தான் உள்ளார். ஒல்லிக்குச்சி என்று கூட சொல்லலாம்.

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான ஹீரோவான விஜய்யின் தளபதி 64 படத்தில் முக்கிய வில்லனாக அங்கமாலி டைரிஸ் மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸுக்குப் பதிலாக அவர் நடித்தார். விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தனது வழிகாட்டியான லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது என்கிறார் அர்ஜூன். படத்தின் நடிகர்கள் தேர்வின் போது குறிப்பிடவில்லை. பின்னர் அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கும்போது,

என் நண்பர் லோகேஷ் எனக்கு திடீரென போன் செய்தார். என்ன என விசாரிக்கும்போது லொகேஷனுக்கு வா என்றார். நான் எதையும் ? எதற்கு? என கேட்காமல் அவர் சொன்ன இடத்திற்கு நேரிடையாக சென்றேன். அப்போதுதான் தெரிந்தது. அது விஜய்யின் படத்தில் பெரும் சவாலான கேரக்டர் என்பதே.

arjun acting as villain role in thalapathy 64ஜனவரி இறுதி வரை ஷிமோகா மற்றும் வேறு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவேன் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் முடியும் வரை வேறு எந்தப் படத்தையும் எடுக்க மாட்டேன் .

சாதாரண பேங்க் அதிகாரியின் மகன். புனே, துபாய், சென்னை ஆகிய இடங்களில் படித்தவர். கோலிவுட்டுடன் எந்த தொடர்பும் அர்ஜூனுக்கு இருந்ததில்லை. பாலிவுட் பாடல் தொகுத்து வழங்கும் வேலையை ரேடியோ ஸ்டேஷனில் ஜாக்கியாக ஒரு சில காலம் வேலை பார்த்துள்ளார்.

அப்போதுதான் இவருக்கு அந்த வாய்ப்பு வந்தது. அதாவது அனைவரும் புதுமுகம். அந்த படத்தில் இவருக்கும் ஒரு கேரக்டர் ரோல் கிடைத்தது. அது டைரக்டர் பிரபு சாலமனின் கும்கி 2 படத்தில் எதிர்மறையான கேரக்டரில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். இன்னும் படம் ரிலீசாகவில்லை.

டைரக்டர் கவுதம் மேனன் வாகனம் ஓட்டும் போதுஒரு நாள் கார் ரேடியோவில் இவரது குரலைக்கேட்டு அதைப் பயன்படுத்த செய்த முயற்சியே இவரின் திருப்பு முனை என்று கூட சொல்லலாம். நடிகர் விக்ரம் நடித்து வெளி வர இருக்கும் கவுதம் மேனன் டைரக்‌ஷனின் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிட ஒரு வித்தியாசமான குரல் தேவைப்படும்போது அர்ஜூன் நினைவில் வந்தார். அது வைரலாகி விட்டது.

arjun acting as villain role in thalapathy 64டைரக்டர் லோகேஷ் தனது கைதி சினிமாவில் கெட்டவனாக நடிக்கணும் அதே நேரத்தில் அவரது குரல் நல்லதாக இருக்க ஒரு ஆளைத் தேடிக்கொண்டிருந்தபோது அர்ஜூன் கிடைத்தார். "டப்பிங்கின் போது, ​​அந்த கதாபாத்திரம் தனித்துவமாகவும், இடைவேளை வரை அமைதியாகவும், பின்னர் வெடித்துச் சிதறியதாகவும் இருந்ததால், அதைச் சரியாகப் பெற அவர்கள் எனக்கு நிறைய உதவி செய்தனர். இதற்கிடையில், தனது தற்போதைய நட்சத்திர அந்தஸ்துடன், அர்ஜூன் ஹீரோவாக தனது முதல் படமான அந்த கரம் படத்தில் நடித்துள்ளார். அறிமுக டைரக்டர் விக்னராஜன் இயக்கிய இப்படமானது விரைவில் வெள்ளித்திரைக்கு வர காத்துள்ளது. அதுவரை இவர் வில்லன் ரோல்களில் ஒரு வலம் வருவார் போல் தெரிகிறது. திரையில் வில்லனாக தெறித்து ரசிகர்களின் மனதை கவருவார் அர்ஜூன்.

Updated On: 13 Aug 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்