/* */

தனது பெண் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா..

Aranthangi Nisha Baby-பச்சிளம் குழந்தையாக உள்ள தனது மகளின் புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை அறந்தாங்கி நிஷா. அந்த புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

Aranthangi Nisha Baby
X

Aranthangi Nisha Baby

Aranthangi Nisha Baby-தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இந்த போட்டியில், இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றார்.

அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகிய இருவரும் மேடையில் தோன்றி, இருவரும் ஸ்டாண்ட் அப் காமெடி வாயிலாக, மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றனர். குறிப்பாக, தன்னைத்தானே நயன்தாரா எனக் கூறிக்கொள்ளும் அறந்தாங்கி நிஷாவை, பழனி பயங்கரமாக கலாய்ப்பதும், ஆண்களை உயர்த்தி பேசும் பழனியை மட்டம் தட்டி, அறந்தாங்கி நிஷா பேசுவதும் மக்களிடம் பலத்த கைதட்டலை பெறுவது வழக்கம். டிவி சேனல்களில் மட்டுமின்றி தமிழகத்தில் நடக்கும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில், கோவில் விழாக்களில் இவர்கள் இருவரும் நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக, பொதுமக்களின் மத்தியில் நேரடியான பாராட்டுகளை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான நிலையில், அதன் பிறகு நடிகை அறந்தாங்கி நிஷா, சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அறந்தாங்கி நிஷா அதனைத் தொடர்ந்து, கே பி ஒய் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன் பிறகு தொகுப்பாளினியாக இவர் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' மற்றும் 'குக் வித் கோமாளி' சீசன் 1 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பிரபலமான அறந்தாங்கி நிஷா, சின்னத்திரையில் கலக்கிக் கொண்டு வந்த இவர் சினிமாவில் 'கோலமாவு கோகிலா', 'மாரி 2', 'திருச்சிற்றம்பலம்', 'ட்ரிக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பை, ரசிகர்கள் வெகுவாக ரசித்து பாராட்டி வருகின்றனர்.

அது மட்டுமின்றி, தற்போது இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா, தனது மகளின் பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அறந்தாங்கி நிஷாவின் மகளா இது என பலருக்கும் ஆச்சரியம் அளித்து வருகிறது.

அதாவது தனது மகளின் பிறந்த நாளான இன்று, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும் வகையில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் அறந்தாங்கி நிஷா. இவர் வெளியிட்ட அவருடைய மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 9 April 2024 4:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்