/* */

வைரலாகி வரும் நடிகை அனிகா 'பர்த் டே' போட்டோஸ்

anikha surendran latest news- சமீபத்தில் தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். அந்த புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

வைரலாகி வரும் நடிகை அனிகா பர்த் டே போட்டோஸ்
X

anikha surendran latest news  - நடிகை அனிகா சுரேந்திரன்.

anikha surendran birthday celebration, anikha surendran latest photos, anikha surendran latest news- நடிகர் அஜித்தின் 'ரீல்' மகளாக பல படங்களில் நடித்து பிரபலம் ஆன அனிகா சுரேந்திரன் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் பெரிய கேக் வெட்டி 18வது பிறந்தநாள் கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மகிழ்ச்சி ததும்ப, பிறந்த நாள் உடையில் அவர் போஸ் கொடுத்து நடிகை அனிகாவின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான, 'என்னை அறிந்தால்' படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகில் 'எண்ட்ரி' கொடுத்தார். இப்படம் பெரிய வெற்றி அடைந்ததற்கு அஜித் - அனிகா இடையேயான தந்தை - மகள் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆனதும் முக்கிய காரணம். இப்படத்தின் வெற்றிக்கு பின், மீண்டும் 'விஸ்வாசம்' படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அனிகா.

இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா - அஜித் ஜோடிக்கு மகளாக நடித்திருந்த அனிகாவை, இப்படத்திற்கு பின்னர் 'குட்டி நயன்' என ரசிகர்கள், செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.


நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் 'அல்டிமேட் ஸ்டார்' நடிகராக உச்சத்தில் இருப்பவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவுக்குள் நுழைந்து, உச்சத்தை தொட்டவர். அவரது மகள் கேரக்டரில் நடித்த அனிகா, ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார். குறிப்பாக, அஜித் மகளாக இரண்டாவது முறையாக நடித்த 'விஸ்வாசம்' படம், பலதரப்பு மக்களையும் கவர்ந்த தந்தை - மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் கதைக்கரு, மகளை சுற்றியதாக இருந்ததால், 'க்ளைமேக்ஸ்' காட்சியில், அஜித் - அனிகா தந்தை மகள் பாச போராட்டத்தை அழகாக நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியது, படத்தின் மெகா வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


இதன்பின் 'மள மள'வென வளர்ந்துவிட்ட அனிகா, தற்போது ஹீரோயினாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இவர் தற்போது 'புட்ட பொம்மா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெளியாகி, 'சூப்பர் ஹிட்' ஆன 'கப்பேலா' படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்திற்கு பின் மேலும் சில பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக தொடர்ந்து, பல்வேறு விதமான போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் அனிகா. அந்த வகையில், தற்போது பிறந்த நாள் உடையில் மகிழ்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள நடிகை அனிகாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில், வேகமாக பரவி வைரல் ஆகி வருகின்றன.

Updated On: 28 Nov 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  2. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  7. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  9. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  10. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...