/* */

ஆடி வெள்ளி! மக்களை பக்தியில் ஆழ்த்திய 10 அம்மன் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் அம்மன் திரைப்படங்கள் ஒரு மீள்பார்வை!

HIGHLIGHTS

ஆடி வெள்ளி! மக்களை பக்தியில் ஆழ்த்திய 10 அம்மன் திரைப்படங்கள்!
X


தமிழ் சினிமாவையும் தமிழக மக்களையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படித்தான் தமிழ் மக்களும் அம்மன் சாமியும். வெளியூர் சாமிகளை கும்பிட்டாலும் நம் முன்னோர்களில் ஒருவராகிய அம்மனை வழிபட ஆடி மாதத்தில் கூடி கூழ் குடித்து கொண்டாடும் திருவிழாவாக மாற்றி வருடா வருடம் கடைபிடித்து வருகிறோம். அம்மனையும் சினிமாவையும் பிரித்து பார்த்துவிடமுடியாது. அப்படி டாப் 10 அம்மன் திரைப்படங்களை இப்போது காண்போம்.

ராஜகாளி அம்மன் (2000)


ராஜா காளியம்மன் என்பது ராம நாராயணன் இயக்கத்தில் கரண், ரம்யா கிருஷ்ணன் மற்றும் கௌசல்யா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த பக்தித் திரைப்படம்.

பொட்டு அம்மன் (2000)



பொட்டு அம்மன் என்பது 2000 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் பக்தித் திரைப்படமாகும், இது கே. ராஜரத்தினம் இயக்கியது மற்றும் மங்களா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. இது ஒரே நேரத்தில் தெலுங்கில் துர்கா என்ற பெயரில்படமாக்கப்பட்டது , ஆர்.கே.செல்வமணி இயக்கினார்மற்றும் ராம்பிரசாத் ரெட்டி தயாரித்தார். இப்படத்தில் வேணு , ரோஜா , சுவாலக்ஷ்மி , சுரேஷ் பாலா, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர் . இப்படம் நடிகை ரோஜாவின் 100வது படமாக விளம்பரப்படுத்தப்பட்டு டிசம்பர் 2000 இல் வெளியிடப்பட்டது

அம்மன் (1995 )


அம்மன் திரைப்படம் 1995 ஆம் ஆண்டு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்தது. இப்படத்தை எம்எஸ் ஆர்ட்ஸ் யூனிட்டின் கீழ் ஷியாம் பிரசாத் ரெட்டி தயாரித்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணா டைட்டில் ரோலில் நடிக்கிறார்கள் மற்றும் சௌந்தர்யா, சுரேஷ், ராமி ரெட்டி, பேபி சுனைனா, வடிவுக்கரசி, கல்லு சிதம்பரம் மற்றும் பாபு மோகன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அம்மன் பூமிக்கு இறங்கி தனது பக்தையான பவானியை தீய சக்திகளிடமிருந்து காக்கிறாள்.

ஆடி வெள்ளி (1990)



ஆடி வெள்ளி 1990ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராம நாராயணன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சீதா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஆடி வெள்ளி திரைப்படத்தில் யானையொன்றும், பாம்பொன்றும் நடித்துள்ளது. இத்திரைப்படத்தில் யானைக்கு வெள்ளிக்கிழமை ராமசாமி என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாளையத்து அம்மன் (2000)



பாளையத்து அம்மன் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் இராம நாராயணன், இந்து சமயத்தின் கடவுள்களில் ஒன்றான அம்மனின் கதாப்பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாளையத்து அம்மன் தெய்வமாக நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் ராம்கி, திவ்யா உன்னி சரண் ராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.

அன்னை காளிகாம்பாள் (2003)



அன்னை காளிகாம்பாள் என்பது 2003 ம் ஆண்டில் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதை ராம நாராயணன் எழுதி இயக்கினார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், அனு பிரபாகர் மற்றும் லிவிங்ஸ்டன்னுடன் இணைந்து நடித்தார். இவர்களுடன் ஜெயந்தியும் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். இப்படம் 2003 சனவரியில் வெளியானது. கன்னடத்தில் ஸ்ரீ காளிகாம்பா என்ற பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வினோத் ஆல்வா மற்றும் டென்னிஸ் கிருஷ்ணா ஆகியோர் லிவிங்ஸ்டன் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோருக்கு மாற்றாக நடித்தனர்.

கோட்டை மாரியம்மன் (2002)



கோட்டை மாரியம்மன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கரண், தேவயானி, ரோஜா, விவேக் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கியிருந்தார். தேவா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பட்டையைக் கிளப்பியது.

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (2001)



ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்பது 2001 ஆண்டு வெளியான தமிழ் பக்தி திரைப்படம் ஆகும். பாரதி கண்ணன் இயக்கிய இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ராம்கி, சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பானுப்ரியா, நிழல்கள் ரவி, வடிவேலு, வினு சக்ரவர்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். புஷ்பா காந்தசாமி தயாரித்த இப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார். படம் 13 ஏப்ரல் 2001 அன்று வெளியிடப்பட்டது.

படைவீட்டு அம்மன் (2002)



படை வீட்டு அம்மன் என்பது 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புகழ்மொழி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மீனா, ராம்கி (நடிகர்), தேவயானி மற்றும் ரவளி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 4 நவம்பர் 2002 இல் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்தி மொழியில் "தேவி துர்கா சக்தி" என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது.

மூக்குத்தி அம்மன் (2020)



மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்பது 2020 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதை என். ஜே. சரவணன் மற்றும் ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் இயக்கிய இந்திய தமிழ் மொழி இந்து பக்தி திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு முன்னணி கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். நயன்தாரா திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார். இந்த படம் மே 2020 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக திரையரங்கு வெளியீடு கைவிடப்பட்டு, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 14 நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது.

Updated On: 4 Aug 2023 5:29 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  2. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  3. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  4. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  6. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  7. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  8. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  9. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு