/* */

பிரபல ஓடிடி தளத்தை வாங்கிய அமேசான்!

திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஓடிடி தளங்கள் மிகவும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. கடந்த சில வருடங்களாக எண்ணற்ற ஓடிடி தளங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பிரபல ஓடிட் தளத்தை அமேசான் நெட்வொர்க் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பிரபல ஓடிடி தளத்தை வாங்கிய அமேசான்!
X

திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஓடிடி தளங்கள் மிகவும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. கடந்த சில வருடங்களாக எண்ணற்ற ஓடிடி தளங்களும் பெருகி வருகின்றன. இந்நிலையில் பிரபல ஓடிட் தளத்தை அமேசான் நெட்வொர்க் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் அடுத்தடுத்த டிரெண்ட் எப்படி இருக்கும் என்பதை உலகநாயகன் கமல்ஹாசன் முன்கூட்டியே கணித்து அதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குவார். அந்த வகையில் மாவட்டத்தில் ஒன்று இரண்டு திரையரங்குகளில் வெளியாகி வந்த படங்களை அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நாளில் வெளியாகும் என ஆளவந்தான் திரைப்படத்தை ஒரே நாளில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட்டு புதுமையை ஏற்படுத்தினார்.

அடுத்து நேரடியாக தொலைக்காட்சியில் படத்தை வெளியிடும் திட்டத்தை அறிவித்தார். விஸ்வரூபம் படத்தை இப்படி திரையரங்கில் வெளியாகும் நாளில் சன் டிடிஎச் மூலம் இந்தியா முழுமைக்கும் ஒளிபரப்பும் திட்டத்தையும் தீட்டியிருந்தார். ஆனால் அது திரையரங்கு உரிமையாளர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து. அப்போது கமல்ஹாசன் இனி டிடிஹெச் உலகை ஆளும் அதைத் தாண்டி இணையதளத்தில் திரைப்படங்கள் வெளியாகும் என்று கூறியிருந்தார். அவர் சொல்லி 10 வருடங்களில் ஓடிடி உலகம் முழுமைக்கும் இருந்து கண்டென்ட்களைப் பெற்று மொழி வேறுபாடுகளின்றி அனைவருக்கும் அந்த கண்டென்ட் சென்று சேரும்படி ஆக்கிவிட்டது.

இப்போது இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஓடிடி தளங்கள் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஆஹா, சன் நெக்ஸ்ட், சோனி, ஜீ உள்ளிட்ட இன்னும் பல ஓடிடி தளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் எம்எக்ஸ் ப்ளேயர். இந்த ஓடிடி தளத்தின் சமீப கால வருவாய் மிகவும் மோசமானதாக இருந்ததால் அந்த நிறுவனம் ஓடிடியை அமேசான் ப்ரைமிடம் விற்க முடிவு செய்துள்ளதாம்.

அமேசான் நிறுவனம் பிரபல ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயர் தளத்தை இந்திய மதிப்பில் ரூபாய் 400 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், இதனை வரும் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

எம்எக்ஸ் பிளேயர் தளத்தில் கோச்சடையான், வடசென்னை, இரும்புத் திரை, லிங்கா, துப்பாக்கி, தீரன், தனி ஒருவன், சிங்கம் 2, பில்லா 2, சேதுபதி, பில்லா, போக்கிரி, மாரி 2, காடன், நம்ம வீட்டு பிள்ளை, பூமராங், யூ டர்ன், கோமாளி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் மற்ற ஓடிடிகளில் ஓடிய பிறகு சில நாட்கள் கழித்து குறிப்பிட்ட வாடகையில் தங்களது ஓடிடியில் வெளியிடுவார்கள்.

Updated On: 3 May 2023 5:49 AM GMT

Related News