/* */

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலாபால்: புகைப்படங்கள் வைரல்

Amala Paul Celebrates 30th Birthday in London - நடிகை அமலாபால் தனது பிறந்தநாளை இங்கிலாந்தின் லண்டன் நகரில் கொண்டாடியுள்ளார்.

HIGHLIGHTS

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலாபால்: புகைப்படங்கள் வைரல்
X

நடிகை அமலாபாலின் லண்டன் புகைப்படங்கள். 

Amala Paul Celebrates 30th Birthday in London -நடிகை அமலாபால் தனது பிறந்தநாளை இங்கிலாந்தின் லண்டன் நகரில் கொண்டாடியுள்ளார்.

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர். இதனையடுத்து 2016-ம் ஆண்டு இருவரும் மணமுறிவு பெற்றனர்.

இந்த நிலையில், நடிகை அமலாபால் தனது 31வது பிறந்தநாளை இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிற்றியுள்ளது வைரலாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமலாபால் போட்டியாளராக கலந்துகொள்ளப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு அவர் சமூக வலைதளங்களில் பதிவு ஏதும் போடாமலேயே இருந்து வந்தார் அமலாபால். இதனிடையே தேடிக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து லண்டனில் இருந்து அவரது புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

amala paul birthday date

கடந்த 1991ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி கேரளாவின் ஆலுவாவில் பிறந்த நடிகை அமலா பால் தனது 31வது பிறந்தநாளை நேற்று லண்டனில் கொண்டாடியுள்ளார். மேலும் சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்து வாழ்த்திய பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

நடிகை அமலாபால், லண்டன் பிரிட்ஜில் எடுக்கப்பட்ட கலர்புல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'கடாவர்' படம் ஓடிடி தளத்தில் வெளியானதற்கு பின்னர், அடுத்தடுத்து ஜாலியான டூர் அடித்து வருகிறார் அமலா பால்.

வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் கடந்து தைரியமாக ஓவர்டேக் செய்து வாழ்ந்து வருகிறார் அமலாபால். இந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான ரசிகர்கள் அமலா பால் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பிரத்யேக பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அந்த போஸ்ட்டுக்கு கீழ் 'ஹேப்பி பர்த்டே அமலா பால்' என பதிவிட்டு வருகின்றனர்.

amala paul date of birth

நடிகை அமலாபால், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு எடுத்த பிகினி உடையில் செம ஹாட் மற்றும் கிளாமர் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். இதனைததொடர்ந்து தற்போது லண்டனில் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் எப்போது இந்தியாவுக்கு வருவதாக திட்டம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  2. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  4. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  6. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  7. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  8. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  9. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்