/* */

தனது இரண்டாவது திருமணத்தை மறைத்தாரா நடிகை அமலாபால்?

Amala Paul 2nd Marriage -நடிகை அமலாபால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து, பொய் புகார் அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தனது இரண்டாவது திருமணத்தை மறைத்தாரா நடிகை அமலாபால்?
X

 amala paul second marriage date - நடிகை அமலாபால், தனது இரண்டாவது திருமணத்தை மறைத்ததாக, சர்ச்சை எழுந்துள்ளது.

Amala Paul 2nd Marriage -தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் அமலா பால். கடந்த 2014 ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2017ம் ஆண்டில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் சென்ற 2016ம் ஆண்டு திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் என்பவருடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு, பின்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, நெருக்கமாக பழகினர்.


இந்த நிலையில் நடிகை அமலாபால், பவீந்தர் சிங் என்பவர் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் விழுப்புரம் போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த விழுப்புரம் போலீசார், பவீந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், புகாரில் மேலும் 11 பேருக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் அவர்களையும் தேடி வருகின்றனர்.


இதை தொடர்ந்து பவீந்தர் சிங் ஜாமீன் கோரி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அண்மையில் கோர்ட்டில் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த வழக்கு விசாரணையில் பவீந்தர் சிங், அமலாபாலுக்கும் தனக்கும் நடந்த பதிவு திருமணத்திற்கான சான்றிதழை கோர்ட்டில் தாக்கல் செய்ததாக, செய்தி வெளியானது.

மேலும் கோர்ட்டில் பாவீந்தர் தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் நடந்த தேதி மற்றும் இடம் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்ததாக, தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 April 2024 4:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...