'ஆஹா' சொல்ல வைக்கும் இந்த பாலிவுட் நட்சத்திர தம்பதியின் குழந்தை பெயர் 'ராஹா'

alia bhatt daughter name- பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் குழந்தைக்கு ‘ராஹா’ என, பெயரிடப்பட்டுள்ளது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆஹா சொல்ல வைக்கும் இந்த பாலிவுட் நட்சத்திர தம்பதியின் குழந்தை பெயர் ராஹா
X

alia bhatt daughter name- தங்களது குழந்தைக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்ட ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி.

alia bhatt daughter name, ranbir kapoor daughter name- நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் இருவரும் கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நவம்பர் 7ம் தேதி மும்பையையில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், தற்போது குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அவர்கள், தங்களது மகளுக்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என தொடர்ந்து பல பெயர்கள் உலா வந்து கொண்டிருந்தது. தற்போது குழந்தை பெயரை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.


அவர்களது குழந்தையின் பெயர் 'ராஹா' என தற்போது தெரிய வந்துள்ளது. தனது மகளுக்கு 'ராஹா' என பெயரிட்டு இருப்பதாக ஆலியா தெரிவித்து இருக்கிறார். அந்த பெயரை, அப்பா ரன்பீர் கபூரின் அம்மாதான் தேர்வு செய்ததாக அவர் கூறி இருக்கிறார்.

அந்த பெயருக்கான அர்த்தம் என்ன எனவும் அவர் கூறி இருக்கிறார்.

அதாவது Raha, in its purest form means divine path. in Swahili she is Joy, In Sanskrit, Raha is a clan, In Bangla - rest, comfort, relief, in Arabic peace, also means happiness, freedom & bliss.

இவ்வாறு ஆலியா குறிப்பிட்டு இருக்கிறார்.


அதாவது 'ராஹா' என்ற பெயருக்கு அதன் தூய்மையான வடிவத்தில் 'தெய்வீக பாதை' என்று பொருள். சுவாஹிலி மொழியில் அவள் 'மகிழ்ச்சி' எனப்படுகிறாள். சமஸ்கிருதத்தில், ராஹா ஒரு 'குலம்', பெங்காலி மொழியில் 'ஓய்வு', 'ஆறுதல்', 'நிவாரணம்' என்ற பொருட்களில் அந்த பெயர் குறிப்பிடப்படுகிறது. அரபு மொழியில் 'அமைதி', மேலும் 'மகிழ்ச்சி', 'சுதந்திரம்' மற்றும் 'பேரின்பம்' என்று பொருள் உள்ளதாக, ஆலியா தெரிவித்துள்ளார். இரண்டே எழுத்துக்களை கொண்ட 'ராஹா' என்ற பெயரில், இத்தனை அம்சங்கள் நிறைந்த விஷயங்கள் கலந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பொதுவாக, குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பலவிதங்கள் உள்ளது. தங்களது மூதாதையர் பெயர்களை வைப்பது, இஷ்ட தெய்வங்கள் பெயர்களை வைப்பது, துாய தமிழ் பெயர்களை வைப்பது, தங்களுக்கு பிடித்தமான நண்பர், உறவினர், நடிகர்கள் பெயர்களை கூட வைப்பது உண்டு.


குறிப்பாக, பெரும்பாலானவர்கள் குழந்தை பிறந்த நாள், நேரம், நட்சத்திரம் போன்றவற்றை கொண்டு, ஜோதிட அடிப்படையில் குறிப்பிட்ட பெயர்களை தேர்வு செய்து வைப்பதும் உண்டு. ஒரு குழந்தையின் பெயர் என்பது, அது வாழும் காலம் வரை, அந்த பெயர்தான் அடையாளம். பேர் சொல்லும் பிள்ளையாக குழந்தை புகழ் அடைந்தாலும், பெற்றோர் வைத்த பெயர்தான், அந்த புகழை அடைகிறது.

அந்த வகையில், 'ராஹா' பெயர், பாலிவுட் திரைப்பட பிரபல தம்பதியின் குழந்தையின் பெயர் என்பதால், இப்போதே பிரபலமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Updated On: 25 Nov 2022 10:29 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...