/* */

ரூ. 220 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அஜித்தின் 62வது படம்

ak 62 movie budget- நடிகர் அஜித் நடிக்கும் அவரது 62வது படத்துக்கான பட்ஜெட், 220 கோடி ரூபாய் என திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

ரூ. 220 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அஜித்தின் 62வது படம்
X

ak 62 movie budget- நடிகர் அஜித்குமார்.

ak 62 movie budget, ak 62 movie update - 'துணிவு' படத்தின் வெற்றியை அடுத்து, அஜித்தின் 62-வது படத்துக்கான பட்ஜெட் 220 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களை தொடர்ந்து, பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'துணிவு' படம் வெற்றிப்படமாக, திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது அஜித் நடிக்க உள்ள 62வது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் 220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட திட்டமிட்டுள்ளதாக, லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.


முன்னணி நடிகர்கள் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்து அவ்வப்போது பல்வேறு சுவாரஸ்ய தகவல் வெளியாகி வருகிறது. சில தகவல்கள் வதந்தியாக கடந்து சென்றாலும் , சில தகவல்கள் உண்மையாகி விடுகிறது. அந்த வகையில்... அஜித் ஒரு படம் நடித்து முடிப்பதற்கு முன்பாகவே, அவர் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், அதனை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. மேலும், எத்தனை கோடி ரூபாய் இந்த படத்துக்காக ஒதுக்கப்படுகிறது, என்னவிதமான கதையம்சத்தை, படம் கொண்டு அமைகிறது என்பதை அறிவதிலும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


அந்த வகையில் ஏற்கனவே தல அஜித், 'துணிவு' படத்திற்கு பின், தொடர்ந்து தன்னுடைய 62 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அஜித், விஜய், ரஜினிகாந்த், போன்ற முன்னணி நடிகர்களை பொறுத்தவரை ஒரு படம் முடிந்த பிறகே, அவர்களின் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல் வெளியாகும். அஜித்தின், 62 வது படம் குறித்து, தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித்குமார் நடிப்பதாக இருந்த படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அஜித்தின் அடுத்த படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த 'துணிவு' திரைப்படமும் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு படங்களைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே, அஜித் நடிக்கும் 62வது புதிய படத்தின் ஓடிடி உரிமையை நெட் ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது.


இந்நிலையில், அஜீத் குமார் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிப்பதாகக் கூறப்பட்ட AK62 படம் பிப்ரவரியில் தொடங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென இந்த கூட்டணியில் உருவாக இருந்த படம், கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மேலும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 உருவாக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இப்படத்துக்கு ரூ. 220 கோடி ரூபாய் பட்ஜெட் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 2 Feb 2023 6:17 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...