/* */

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை! தங்க வைர நகைகள் திருடு போனதாக புகார்!

பிப்ரவரி 10ம் தேதி காணாமல் போன நகைகளை ஒரு மாதம் கழித்து தேடிக்கொண்டிருக்கிறாரே இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என நெட்டிசன்கள் கொளுத்தி போடுகின்றனர்.

HIGHLIGHTS

ரஜினி மகள் வீட்டில் கொள்ளை! தங்க வைர நகைகள் திருடு போனதாக புகார்!
X

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டிலிருந்து பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர்தான் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். மகன்களுக்காக மட்டும் அவ்வப்போது பேசி வருவதாகவும் சேர்ந்து பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வந்த தகவலின்படி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறது ஐஸ்வர்யா தரப்பு. அதில் வைர நகைகள், பழங்கால தங்க, நவ ரத்தின நகைகள் பல காணாமல் போயிருப்பதாக புகார் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 60 சவரனுக்கும் அதிகமான நகைகள் அவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன.


கடந்த 2019ம் ஆண்டு தனது தங்கை சவுந்தர்யா திருமணத்தில் பயன்படுத்திவிட்டு நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாகவும் பின்னர் அது கடந்த 2021 ஆகஸ்ட் வரை செயிண்ட் மேரி சாலையில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனுஷிடன் அவர் வாங்கிய குடியிருப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக திரும்பவும் நகைகளை செயிண்ட் மேரி சாலையிலுள்ள இவரது குடியிருப்பிலேயே வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அன்று ரஜினிகாந்தின் இல்லமான போயஸ் கார்டன் வீட்டுக்கு மாற்றப்பட்டது. ஆனால் லாக்கரின் சாவிகள் செயிண்ட் மேரிஸ் சாலையிலுள்ள தனது குடியிருப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இடம் குறித்து தனது ஊழியர்களுக்கு தெரியும் அவர்கள் அவ்வப்போது தனது அபார்ட்மெண்ட்க்கு செல்வார்கள் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.


கடந்த பிப்ரவரி 10ம் தேதி லாக்கரை சரிபார்த்த போது திருமணமான பிறகு சேர்த்து வைத்த 3 கோடி மதிப்பிலான நகைகள் காணாமல் போயிருக்கின்றன. இந்த புகாரின் அடிப்படையில் அவர் வீட்டில் பணிபுரிந்துவரும் 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 10ம் தேதி காணாமல் போன நகைகளை ஒரு மாதம் கழித்து தேடிக்கொண்டிருக்கிறாரே இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என நெட்டிசன்கள் கொளுத்தி போடுகின்றனர்.

Updated On: 20 March 2023 3:55 AM GMT

Related News