/* */

48 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் வெளிவரும் எம்.ஜி.ஆர். படம்

எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த 'சிரித்துவாழவேண்டும்' தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர உள்ளது.

HIGHLIGHTS

48 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் வெளிவரும் எம்.ஜி.ஆர். படம்
X

சிரித்து வாழவேண்டும் படத்தில் ஒரு காட்சி.

தமிழ்த் திரையுலகின் எவர்கிரீன் ஹீரோ என்று எம்.ஜி.ஆரைச் சொல்வதில் மிகையேதும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர். மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்போதும் அவரது திரைப்படங்களுக்கான வரவேற்பு சற்றும் குறையவில்லை என்று சொல்லலாம். ஆம். எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதற்கான பெருங்கூட்டத்தினர் இப்போதும் இருக்கிறார்கள்.

அதனடிப்படையில்தான், எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களை அண்மைக்காலமாக தற்கால தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி புதுப்பொலிவுடன் டிஜிட்டல் வடிவில் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்த முக்கியமான திரைப் படங்களில் ஒன்றான 'சிரித்து வாழ வேண்டும்' திரைப் படமும் தற்போது, டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு ஹெச்டியில் புதுப் பொலிவுடன் வெளி வர உள்ளது. இந்தத் திரைப் படத்தின் சிறப்பு என்னவென்றால், இரட்டை வேடம் ஏற்றிருக்கும் எம்ஜிஆர் ஒரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு வேடத்தில் இஸ்லாமியராகவும் வருவார்.

எம்.ஜி.ஆர். தி.மு.க-வை விட்டுப் பிரிந்து அ.தி.மு.க-வைத் தொடங்கிய அடுத்த ஆண்டில் வெளியான திரைப் படம்தான் 'சிரித்து வாழ வேண்டும்'. இது, நடிகர் அமிதாப்பச்சன் நடித்த இந்தித் திரைப் படமான 'சஞ்சீர்' என்கிற திரைப் படத்தின் தழுவல் படமாகும். இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன், பிரான் இருவரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். அமிதாப் போலீஸ் அதிகாரி வேடத்திலும், பிரான் இஸ்லாமியராகவும் நடித்திருப்பார். ஆனால், தமிழில் எம்.ஜி.ஆர். இரண்டு கதாபாத்திரத்திலும் அவரே இரட்டை வேடங்கள் ஏற்று நடித்திருப்பார். அந்த இரண்டு வேடங்களிலும் எம்.ஜி.ஆர். அசத்தியிருப்பார். அதிலும் இஸ்லாமியர் வேடம் என்றால் எம்.ஜி.ஆருக்கு கைவந்த கலை. ஏற்கெனவே, 'மலைக்கள்ளன்' திரைப்படத்திலேயே கலக்கியிருப்பார் எம்.ஜி.ஆர்.

அமிதாப் நடித்த இந்தி படம் மற்றும் தழுவலான எம்.ஜி.ஆரின் சிரித்து வாழ வேண்டும் பட காட்சிகள்.

'சிரித்து வாழ வேண்டும்' திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எம்.ஜி.ஆர். ஒரு கொள்ளைக்கூட்ட லாரியை மடக்க முயல அந்த லாரி மோதி பள்ளிக் குழந்தைகள் பலியாவர். அதன் சாட்சியான லதாவுக்கு பிரச்சினை வரும்போது, அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். பின்னர் தன்னுடன் தங்க வைப்பார். அப்போது அவர்களுக்குள் காதல் மலரும். இதில் இஸ்லாமியரான எம்.ஜி.ஆருக்கும், போலீஸ் அதிகாரி எம்.ஜி.ஆருக்கும் முதலில் மோதல் வந்து பின்னர் நட்பாக மாறும். போலீஸ் அதிகாரி உயிரை ஒருதடவை இஸ்லாமியரான எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார்.

படத்தில், லஞ்சம் வாங்கியதாக போலீஸ் அதிகாரி எம்.ஜி.ஆரை சிக்க வைப்பார்கள். இதையெல்லாம் இஸ்லாமிய எம்.ஜி.ஆர். உதவியுடன் முறியடிப்பார் போலீஸ் அதிகாரி எம்.ஜி.ஆர். இஸ்லாமிய இளைஞராக வரும் எம்.ஜி.ஆர். இத்திரைப் படத்தில் பாடும் "ஒன்றே சொல்வான், நன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம்" என்கிற பாடல் அப்போதும் இப்போதும் மிகப்பிரபலம். "உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்", "பொன்மனச் செம்மலை புண்பட வைத்தது யாரோ" "கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்" என்கிற பாடல்கள் எப்போதும் ரசிக்கத்தூண்டும்படியன எவர்கிரீன் பாடல்கள் எனலாம்.

தற்போதுள்ள தொழில் நுட்ப வசதியில், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எம்.ஜி.ஆரின் பல படங்கள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் ஏன் பிறந்தேன்' உள்ளிட்ட பல படங்கள் ஹெச்டி தரத்தில் கண்ணுக்கு விருந்தாய் மாறியுள்ளது. இந்தநிலையில், 'சிரித்து வாழ வேண்டும்' திரைப் படமும் டிஜிட்டலில் ஹெச்டி பிரிண்டில் கண்ணுக்கு விருந்தாய் வர உள்ளது. அதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி எம்.ஜி.ஆர். பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 30 நவம்பர் 1974-ம் ஆண்டு 'சிரித்து வாழ வேண்டும்' திரைப் படம் வெளியானது. தற்போது 48 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் புதுப்பொலிவுடன் இத்திரைப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது கோலிவுட்டின் கொண்டாட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Updated On: 29 Nov 2022 7:39 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...