/* */

Adipurush Box office Day 1 மரண அடி வாங்கிய பிரபாஸ்... ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் என்ன ஆச்சு?

ஆதி புருஷ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கடுமையாக அடிவாங்கியிருப்பதால் பிரபாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.

HIGHLIGHTS

Adipurush Box office Day 1 மரண அடி வாங்கிய பிரபாஸ்... ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் என்ன ஆச்சு?
X

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ஆதி புருஷ் திரைப்படம் 3டி பிளஸ் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 600 கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான முதல் காட்சியிலேயே இது கட்டமைக்கப்பட்ட எதிர்பார்ப்பு என்பது தெரியவந்துள்ளது.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தின் கலெக்ஷன் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபாஸுடன், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எதிர்பார்த்தபடி இல்லை என்பதுதான் படக்குழுவின் அதிர்ச்சிக்கு காரணம்.

ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக 600 கோடி பட்ஜெட், 3டி மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பம் என உருவாக்கினாலும் இது குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட கார்ட்டூன் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 4000 திரைகளில் வெளியானாலும் முதல் நாள் முடிவில் வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

முன்பதிவில் 3.5 கோடி ரூபாய் வசூல் செய்த ஆதிபுருஷ், தெலுங்கில் 38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதுவும் நடிகர் பிரபாஸின் ரசிகர்களால் சாத்தியமானது. இந்தியில் வெறும் 10 கோடி ரூபாயும், தமிழகத்தில் சில லட்சங்களும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் படுதோல்வியடைந்தன. அதேபோல இப்போது ஆதிபுருஷ் படமும் மண்ணைக் கவ்வியிருக்கிறது.

Updated On: 17 Jun 2023 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  2. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  4. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  5. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  6. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  7. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  10. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்