/* */

காங்கிரசுக்கு புது வரவு...... தேசிய அரசியலில் களம் இறங்க திட்டமிட்டுள்ள நடிகை த்ரிஷா

actress trisha latest news தமிழ்த் திரையுலகில் இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தேசிய அரசியலில் களம் இறங்க உள்ளார் என்ற செய்தி திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

HIGHLIGHTS

காங்கிரசுக்கு புது வரவு......  தேசிய அரசியலில் களம் இறங்க  திட்டமிட்டுள்ள நடிகை த்ரிஷா
X

actress trisha latest news

இந்தியாவைப்பொறுத்தவரை அரசியலுக்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. டில்லி அரசியல் முதல் மாநில அரசியல் வரை அந்தந்த மாநிலத்தில் சினிமாவில் உள்ள நடிகர்கள் அங்குள்ள அரசியலிலும் சேர்ந்து பதவியை பிடிப்பது என்பது பன்னெடுங்காலமாக நடந்து வரும் கதை.

நடிகைகுஷ்பூ முதன் முதலாக திமுகவில் இருந்தார்.பின்னர் அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.பின்னர் விலகி தற்போது பாஜவில் உள்ளார். அதேபோல் நக்மா தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியில் மகிளா அமைப்பில் பதவியில் உள்ளார். இதுபோல் ஒரு சிலர் மாநில அரசியலிலும், ஒருசில நடிகைகள் தேசிய அரசியலிலும் மாறி மாறி பயணம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது நடிகை த்ரிஷா தேசிய அரசியலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஜெயலலிதா போல் அரசியலில் இறங்கி பல சாதனைகள் செய்து புகழ் பெற வேண்டும் என்ற ஆசையுடன் அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம். விரைவில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவுக்கு முழுக்குபோடுவாரா? அல்லது அப்போதும் நடிப்பாரா? என்பது அரசியலுக்கு வந்த பின்னர்தான் தெரியவரும்.

actress trisha latest newsஇவர் தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தொடர்ந்து சினிமாவில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார். டைரக்டர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தளபதி விஜயின் 67வது படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் திடீரென அரசியலில் வலம் வர உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதிலும் குறையாத அழகு

இன்றளவில் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம்பிடித்து அதனை விடாமல் தக்கவைத்துள்ளார் நடிகை த்ரிஷா. இவருக்கு வயது 40ஆகி விட்டாலும் அழகு குறையாமல் இருப்பதால் தற்போதும் இவரை நோக்கி கதாநாயகிக்கு கால்ஷீட்டுக்கு வருகின்றனர்.

இவர் நடித்துள்ள தமிழ் படங்களான ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாளத்தில் ராம் படத்திலும், தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் பிசியாக உள்ளார் த்ரிஷா.

தளபதி 67 கதாநாயகி

actress trisha latest newsநடிகர் விஜயின் தளபதி 67 படத்தினை கமலின் விக்ரம் படத்தினை வெற்றிப்படமாக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.இப்படத்திலும் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது.

நடிகை நயன்தாரா அண்மையில் திருமணம் செய்துகொண்டதைப்போல் நடிகைத்ரிஷாவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் களம்புகுகிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

Updated On: 19 Aug 2022 12:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....