/* */

தமன்னாவுக்கு திருமணம்... எப்போது தெரியுமா? இதோ பதில்...!

பாலிவுட் நடிகரைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தமன்னாவுக்கு திருமணம்... எப்போது தெரியுமா? இதோ பதில்...!
X
நடிகை தமன்னாவுக்கும் நடிகர் விஜய்க்கும் திருமணம்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை தமன்னா சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்திய நடிகையாக பல்வேறு ரசிகர்களைக் கொண்டுள்ள தமன்னா, பிரபல பாலிவுட் நடிகரைக் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் எப்போது நடக்கும் என கேள்வி எழுந்துள்ளது.

ஹிந்தியில் சாந்த் சே ரோஷன் சேஹ்ரா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தமன்னா அடுத்து தெலுங்கில் ஸ்ரீ படத்திலும் தமிழில் கேடி படத்திலும் அறிமுகமானார். தமிழில் அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் கூடுதல் படங்கள் நடிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வர அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

அஜித்,விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விஷால், பிரபுதேவா என கிட்டத்தட்ட பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். இப்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா வாழ்க்கையில் பீக்கில் இருக்கும் தமன்னா தற்போது நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாக கூறுகின்றனர்.

அவர் வேறு யாருமில்லை ஹிந்தி நடிகர் விஜய் வர்மாதான். இதுகுறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் இருவரும் டேட்டிங் செல்வது உறுதியான தகவல்தான்.

அபுதாபியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐஎஃப்எஃப்ஏ 2023 விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் வர்மா கலந்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் சில கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் திருமணம் குறித்த நல்ல செய்து எதுவும் கூறுவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விரைவில் நல்ல செய்து கூறுகிறேன் என்று கூறி சென்றார்.

இதனை வைத்துக் கொண்டு தமன்னாவை விரைவில் விஜய் வர்மா திருமணம் செய்துகொள்வார் என்று பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Updated On: 23 Sep 2023 3:42 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  4. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  6. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  7. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  8. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  9. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  10. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??