/* */

ஐரோப்பாவில் நடிகை ஸ்ரேயாவும் அவரது குழந்தையும்..!

Shreya Actress - நடிகை ஸ்ரேயா தனது குழந்தை மற்றும் கணவருடன் ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

ஐரோப்பாவில் நடிகை ஸ்ரேயாவும் அவரது குழந்தையும்..!
X

குழந்தையுடன் நடிகை ஸ்ரேயா.

Shreya Actress - தெலுங்குத் திரைப்பட உலகில், முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தமிழில், ' எனக்கு 20 உனக்கு 18' என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'மழை' படத்தில் சைலஜாவாக வந்து ரசிகர்களின் இதயத்தில் குளிர் மழையானார். இப்படத்தில், ஸ்ரேயா, ஜெயம் ரவியுடன் மழை பாடலுக்கு ஆடிய நடனம் இன்று வரை பிரபலம். பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு தமிழிலும் இவர் காட்டிய கவர்ச்சி முன்னணி நாயகியாக இவரை முன்னிறுத்தியது.

அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் 'சிவாஜி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', விக்ரமுடன் 'கந்தசாமி', தனுஷுடன் 'திருவிளையாடல் ஆரம்பம்', 'குட்டி', சரத்குமாருடன் 'ஜக்குபாய்', ஆர்யாவுடன் 'சிக்கு புக்கு' மற்றும் ஏராளமான தென்னிந்தியப் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, 2013-க்குப் பிறகு பெரிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அதோடு, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், குழந்தையுடனான அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை ஸ்ரேயா. தற்போது தனது 1 வயது மகள் ராதாவுடன் ஐரோப்பாவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ஸ்ரேயா, அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் அங்கு எடுத்துள்ள சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் தாயும் மகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஜோடியாக மிளிர்கின்றனர். மேலும், அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க