நைட் பார்ட்டியில் நடிகை ராஷ்மிகாவின் குதூகலம்.. ரசிகர்களிடையே வைரல்

rashmika mandanna hindi film - பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நைட் பார்ட்டி பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நைட் பார்ட்டியில் நடிகை ராஷ்மிகாவின் குதூகலம்.. ரசிகர்களிடையே வைரல்
X

ராஷ்மிகா மந்தனா

rashmika mandanna hindi film - தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம், அவருக்கு மிகப்பெரிய முன்னெடுப்பை கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து தேவதாஸ், டியர் காம்ரேட் என பல படங்கள் வரிசைக் கட்டியது. கடந்தாண்டு 'புஷ்பா' வெளியாகி அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. தெலுங்கில் அசத்திய ராஷ்மிகா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது பாலிவுட் படத்திலும் அறிமுகமாகியுள்ளார்.

'சுல்தான்', 'புஷ்பா' என மாஸ் காட்டிய ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் 'வரிசு' படத்தில் நடிக்க ஜாக்பாட் கிடைத்தது. இந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் டூயட் பாடி வருகிறார். அப்படியே பாலிவுட்டிலும் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. இதன்மூலம் இந்தியிலும் தனது கணக்கைத் தொடங்கியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் அறிமுகமாகும் 'குட்பை' திரைப்படத்தை, விகாஸ் பால் இயக்கியுள்ளார். ராஷ்மிகா, அமிதாப் பச்சன் லீடிங் கேரக்டரில் நடிக்க, நீனா குப்தா, சுனில் குரோவர், பாவில் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். காமெடி ப்ளஸ் எமோஷனல் ஜானரில் ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம், அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'குட்பை' படம் வரும் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாகிறது. இதன் தொடக்கமாக தற்போது அந்த படத்தில் ராஷ்மிகா பார்ட்டியில் கலக்கும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், 'குட்பை' படத்தில் இருந்து 'The Hic Song' வெளியாகி வைரலாகி வருகிறது. அமித் திரிவேதி இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், ராஷ்மிகா மந்தனா நைட் பார்ட்டியில் குதூகளிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

தெறிக்கும் இசை, அல்டிமேட் டான்ஸ் என அமர்க்களப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் குறித்து ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அந்தப்பதிவில், "இந்தப் பாடலை கேட்க ஆரம்பித்ததில் இருந்து இன்னும் நிறுத்தவே இல்லை. உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Updated On: 2022-09-23T15:34:49+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...