/* */

ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்கும் நடிகை ராஷ்மிகா

varisu movie actress rashmika mandanna increased her salary-நடிகை ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாப பேசப்படுகிறது.

HIGHLIGHTS

ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்கும் நடிகை ராஷ்மிகா
X

நடிகை ராஷ்மிகா.

varisu movie actress rashmika mandanna increased her salary-தெலுங்கு திரை உலகின் இளம் நட்சத்திரம் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் ராஷ்மிகா. இரண்டே படத்தில் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. நன்கு தமிழ் பேச தெரிந்த இவருக்கு கோலிவுட்டிலும் அதிக மவுசு உள்ளது.

இதன் காரணமாக கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம் கோலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்தார். ராஷ்மிகா. இதன்பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு அங்கு அடுத்தடுத்து 3 பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் டாப் நடிகரான விஜய் உடனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

நடிகை ராஷ்மிகாவுக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட வாய்ப்புகள் குவிந்து வருவதற்கு முக்கிய காரணம் அவரது சக்சஸ் தான். குறிப்பாக சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியான புஷ்பா, சீதா ராமம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. இதனால் ராசியான ஹீரோயின் என்றும் பெயர் எடுத்துள்ளார் ராஷ்மிகா.

நார்த் முதல் சவுத் வரை தனக்கு இருக்கும் மவுசை புரிந்துகொண்ட ராஷ்மிகா, தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கு முன் ஒரு படத்துக்கு ரூ,2 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர், அதனை தற்போது இரு மடங்காக உயர்த்தி ஒரு படத்து ரூ.4 கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம். இனி அவர் நடிப்பில் வரும் படங்கள் ஹிட்டாவதை பொறுத்து அவர் மேலும் சம்பளத்தை உயர்த்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Updated On: 9 Aug 2022 7:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!