/* */

தீவிர அரசியலில் இறங்க நடிகை நமீதா திட்டம்

Actress Namitha Entering In Politics -தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டு இருப்பதாக நடிகை நமீதா திருப்பதியில் அளித்த பேட்டியில் கூறினார்.

HIGHLIGHTS

தீவிர அரசியலில் இறங்க  நடிகை நமீதா திட்டம்
X

actress namitha entering in politics, Actress Namitha Political Entryநடிகை நமீதா

Actress Namitha Entering In Politics -தமிழ் திரை உலகில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளை விட கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் குறுகிய காலகட்டத்தில் பிரபலமாகி விடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. நடிகைகள் குஷ்பூ. ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா. மீராஜாஸ்மின் என இந்த வரிசையில் நீண்ட பட்டியலே உண்டு.

actress namitha entering in politics, Actress Namitha Political Entryஅந்த வகையில் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட நமீதா என்ற கவர்ச்சி நடிகை தமிழ் திரை உலகில் நடிகர் விஜய்காந்த் உடன் 'எங்கள் அண்ணா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

actress namitha entering in politics, Actress Namitha Political Entryஅதன் பின்னர் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து அஜித், விஜய், சரத்குமார் என தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சரத்குமாருடன் இவர் நடித்த ஏய் என்ற படம் அவரது கவர்ச்சியின் உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னி ஆனார். இவர் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்களை பார்த்து மச்சான்ஸ் அழைத்து மிகவும் பிரபலமானார்.

actress namitha entering in politics, Actress Namitha Political Entryநமீதாவுக்கு காலம் செல்ல செல்ல பட வாய்ப்புகள் குறைந்தன. இதனை தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார். நடிகர் கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னரும் அவருக்கு தமிழ் திரை உலக வாய்ப்புகள் குறைந்து கொண்டே சென்றதால் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது வரை அக்கட்சியில் உறுப்பினராக உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


actress namitha entering in politics, Actress Namitha Political Entryஇந்நிலையில் நடிகை நமீதா கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த வீரேந்திர சவுத்திரி என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவர் வீரேந்திர சவுத்திரி மற்றும் குழந்தைகளுடன் நடிகை நமீதா திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் நமீதாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினார்கள். தரிசனம் முடிந்து வெளியே வந்த நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்தனர். அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நமீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


actress namitha entering in politics, Actress Namitha Political Entryஎனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது குழந்தைகள் நலமாக உள்ளனர். கடவுளுக்கு நன்றி சொல்லவே நாங்கள் வந்தோம். எனக்கு சினிமாவில் நடிப்பதைவிட அரசியலில் ஈடுபடவே அதிக ஆர்வம் இருக்கிறது. விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

actress namitha entering in politics, Actress Namitha Political Entryஇதனை தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் போன்றவற்றில் எந்த மாநில அரசியலில் ஈடுபடுவீர்கள் என்று கேட்டபோது, அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார். விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலில் நமீதா அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  3. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  6. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  7. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  8. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  9. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  10. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!