/* */

தெலுங்கில் குத்தாட்டம் போட்டு குதூகலப்படுத்தும் நடிகை அஞ்சலி..!

நடிகை அஞ்சலி தெலுங்குப் படத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டம் போட்டுள்ளார். அப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

தெலுங்கில் குத்தாட்டம் போட்டு குதூகலப்படுத்தும் நடிகை அஞ்சலி..!
X

நடிகை அஞ்சலி.

இயக்குநர் ராம் இயக்கத்தில் 'கற்றது தமிழ்' படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனைத் தொடர்ந்து, 'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு', 'சேட்டை' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகியர் வரிசையில் இடம் பிடித்து உயர்ந்தார்.

அண்மைக்காலமாக, அஞ்சலிக்குத் தமிழ்த் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கும் குறிப்பிடத்தகுந்த வாய்ப்புகள் அமையாத நிலையில், சமூக வலைத்தளங்களில் கண்கொத்தும் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு, தனக்கு குடும்பப் பாங்கான வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி கிறங்கடிக்கும் குத்தாட்டமும் போடத் தெரியும் என்பதை இதன் மூலம் பறைசாற்றினார்.

'நிசப்தம்' படத்திற்குப் பிறகு தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரணின் 15ஆவது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் அஞ்சலி, ஜான்சி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தெலுங்கில் நிதின் நாயகனாக நடித்து வரும் ‛மச்சேர்லா நியோஜெகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்குக் கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.

இதன் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் தனது குத்தாட்டக் குலுக்கல் வழியாக உட்கார்ந்து வழிந்து, பலரின் தூக்கத்தை பணால் ஆக்குவது உறுதி என்பது போல தெலுங்குப் படத்தின் கவர்ச்சி குத்தாட்டப் போஸ்டரை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் நடிகை அஞ்சலி.

Updated On: 4 July 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...