/* */

திருச்சி விமான நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கி தவித்த நடிகர் விக்ரம்

திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் சிக்கியதால் பாதுகாப்பு படை போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.

HIGHLIGHTS

திருச்சி விமான நிலையத்தில் ரசிகர்களிடம் சிக்கி தவித்த நடிகர் விக்ரம்
X

நடிகர் விக்ரம்.

தமிழ் திரையுலகின் சில்வஸ்டார் ஸ்டாலோன் என அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். சேது படத்தில் அவர் நடித்த சீயான் கேரக்டர் அவருக்கு அடைமொழியாக போனது. அவர் நடித்த படங்கள் வெற்றி விழா படங்களாக தொடர்ந்து அமைந்து வருவதாலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரம் உள்ளது.

இந்நிலையில் திருச்சி ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெறும் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விக்ரம் விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து இருந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால் நடிகர் விக்ரம் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் அவரை பேட்டி எடுப்பதற்காக சந்திக்க முயன்றனர்.


ஆனால் அலைகடல் போல் திரண்டு வந்த ரசிகர்கள் கூட்டத்தில் அவர் சிக்கித் தவித்தார். செய்தியாளர்கள் அருகில் அவர் வர முடியாத சூழல் ஏற்பட்டதால் விக்ரமுடன் வந்திருந்த பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக வேறு பகுதிக்கு சென்றனர்.அங்கும் ரசிகர்கள் திரண்டு வந்ததால் சி.ஆர்.பி.எப். எனப்படும் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் நடிகர் விக்ரமின் ரசிகர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். அதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. பவுன்சர்கள் வழிகாட்ட நடிகர் விக்ரம் காரில் ஏறி கல்லூரி விழாவிற்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 24 Aug 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க