/* */

ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்த படங்கள் இணையத்தில் வெளியீடு

actor vijay varisu movie latest photos, Varisu new stillsரசிகர்களுடன் நடிகர் விஜய் சமீபத்தில் எடுத்த படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்த படங்கள் இணையத்தில் வெளியீடு
X

நடிகர் விஜய்.

actor vijay varisu movie latest photos, Varisu new stillsதமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜய். இவரது படங்கள் நல்ல வசூல் பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் மத்தியில் அதிக மரியாதை பெற்று வருகின்றன. இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே ப்ரீ ரிலீஸ் ஆக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், சேட்டிலைட் தொலைக்காட்சிகளில் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளன. அந்த வகையில்ரூ. 271 கோடிக்கு ரிலீசுக்கு முந்தைய வசூல் என சமீபத்தில் தகவல்கள் பரவியது.


actor vijay varisu movie latest photos, Varisu new stillsஇந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக குறிப்பாக ஆந்திராவில் சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் நடிகர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அருகே உள்ள பனையூரில் தனது ரசிகர்கள் மற்றும் விஜய் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார் .அப்போது ஆர்வம் மிகுதியால் ரசிகர்கள் பலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதாக அப்போது கூறப்பட்டது. இந்த புகைப்படங்களை விஜய் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.



actor vijay varisu movie latest photos, Varisu new stillsஅத்துடன் வாரிசு படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படம் எல்.சி.யூ.வில் இணையும் என்று கூறப்படுகிறது. இப்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஹீரோ விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Updated On: 22 Nov 2022 6:52 AM GMT

Related News