Vijay Antony Daughter Meera Suicide-பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
Vijay Antony Daughter Meera Suicide-பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை
X

தந்தை விஜய் ஆண்டனியுடன் மீரா (கோப்பு படம்)

Vijay Antony Daughter Meera Suicide

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் வேட்டைக்காரன் உட்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும் நான், பிச்சைக்காரன், சைத்தான் உள்பட பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

மீரா

இவர் சென்னை டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் மீரா. 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். சென்னையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வந்த மீரா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவர் தூக்கில் தொங்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

மீரா எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் போலீசார் மீராவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம் என்றால் வீட்டில் பிரச்சனையா அல்லது பள்ளியில் பிரச்சனையா அல்லது சக தோழிகள் மத்தியில் ஏதும் பிரச்சனையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Updated On: 22 Sep 2023 4:58 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை