/* */

கர்ணனாக கலக்கப்போகும் மாஸ் நடிகர்! அடுத்த பான் இந்தியன் ஸ்டார்?

Actor Suriya in Mahabharat Movie-கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் மாஸ் நடிகர் தற்போது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

HIGHLIGHTS

Actor Suriya in Mahabharat Movie
X

Actor Suriya in Mahabharat Movie

Actor Suriya in Mahabharat Movie-நடிகர் சூர்யா தனது எல்லைகளை விரிவு செய்துகொண்டே செல்கிறார். தமிழ் சினிமாவின் நாயகனாக அறிமுகமாகி பின் அதிரடி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, அதன் பின்னர் மாஸ் நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார். சூர்யாவின் ஆஸ்தான நாயகரான கமல்ஹாசனுடன் சேர்ந்து அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடைசி நிமிடங்களில் களமிறங்கினாலும் கமல்ஹாசனுக்கு நிகரான மாஸை காட்டிவிட்டு சென்றார்.

இந்நிலையில் இப்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 42 வது படமான இதற்கு கங்குவா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பத்து மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா படத்தில் இணைவார் என்று தகவல் வந்த நிலையில், இப்போது சூர்யா ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்கிறார்கள்.

பாலிவுட் படம் என்றாலும் இது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகும் படமாக அமையும் என்றும் இந்த படத்தின் கதை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்துக்கு செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகத் தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கி அங்கே சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சூர்யா மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியில் அமைந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடித்து வருகிறார். தற்போது கோடை வெயிலால் விடுமுறையில் இருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. வரும் ஜூன் 20ம் தேதி அடுத்தக் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இதில் சூர்யா கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பில் சூர்யா - திஷா இணைந்து நடனமாடும் பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள். 8 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்புக்கு பிறகு கொடைக்கானலில் தொடர்ந்து மற்ற காட்சிகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 7:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...