/* */

விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிம்பு...!? மகிழ்ச்சியான ரசிகர்கள்..!

Actor Simbu in Vijay's Varisu - விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிலம்பரசன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிம்பு...!? மகிழ்ச்சியான ரசிகர்கள்..!
X

நடிகர் விஜய்யுடன் சிம்பு.

Actor Simbu in Vijay's Varisu - விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் சிலம்பரசன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். திரையுலகில் நடித்து சுமார் 10 படங்களுக்குப்பின்னரே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு தளபதி என பட்டத்தையும் சூட்டி அழைத்து வருகின்றனர். இவருக்கு இந்தியா உள்ளிட்ட சீனா, ஜப்பான், மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ரசிகர்கள் ஏராளாம். இவரது படங்கள் 5 கண்டங்கள் மற்றும் 80 நாடுகளில் வெளியாகி உள்ளன. இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 100 பட்டியலின் இந்திய பதிப்பில் பல முறை விஜய் இடம்பெற்றுள்ளார்.

தற்போது விஜய்யின் படங்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், வம்சி இயக்கத்தில் வாரிசு உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் நடிகர் சிம்புவும் நடிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 66வது படம் வாரிசு. வம்ஷி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தை பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வாரிசு படம் வெளியாகிறது. ஏறக்குறைய 9 வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித் நடிக்கும் படங்கள் நேருக்கு நேர் வருவதால் இரு படங்களுக்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் பாடிய ரஞ்சிதாமே பாடல் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடல் யூடியூப்பில் வெளியாகி 65 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது.

simbu in varisu movie

இந்நிலையில் வரிசு படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த மாதம் பாடலை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Nov 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...