/* */

மஜாவாக வெளிவந்த கார்த்தியின் 25வது படமான ஜப்பான் பட போஸ்டர்.

Actor Karthi's Japan First Look Poster -கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது

HIGHLIGHTS

மஜாவாக வெளிவந்த கார்த்தியின் 25வது படமான ஜப்பான் பட போஸ்டர்.
X

Actor Karthi's Japan First Look Poster -கார்த்தி தற்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். விருமன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஹாட்ரிக் வெற்றி பெற்ற கார்த்தி அடுத்ததாக ஜப்பான் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் கார்த்தி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்திக்கு ஜப்பான் படமும் முற்றிலும் வித்தியாசமான கதை களத்துடன் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஜப்பான் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவ் சண்டைப் பயிற்சி வழங்குகிறார்.


இந்நிலையில் ஜப்பான் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் ஒரு சோபாவில் கையில் சரக்குடன் மது அருந்திவிட்டு உச்சகட்ட போதையுடன் படுத்து உள்ளார் கார்த்தி. கீழே ஒரு பெண் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

இன்னொரு போஸ்டரில் தங்க நிற உடையில் கழுத்து முழுக்க தங்கம் கையில் உலோக உருண்டை என துப்பாக்கியுடன் நிற்கிறார். ஆகையால் பெண், போதை என ஒரு உலகை சுற்றும் வாலிபனாக இந்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார் என்பது இந்த போஸ்டரின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஜப்பான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளனர். படத்தின் போஸ்டரில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால் தங்கம் தொடர்பான கதையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருமென தெரிகிறது.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கார்த்தியின் அடுத்த திரைப்படமான 'ஜப்பான்' குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது இந்த போஸ்டரை பார்த்த கார்த்தி ரசிகர்கள் இதை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Nov 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...