/* */

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளில் 'விக்ரம்' படத்தின் 100வது நாள் விழா

Kamal Haasan Birthday -'விக்ரம்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா, நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் ஏழாம் தேதி கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளில் விக்ரம் படத்தின் 100வது நாள் விழா
X

Kamal Haasan Birthday -எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி 'விக்ரம்' படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவைக் கொண்டாட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டமும் 'விக்ரம்' படத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமும் ஒருசேர நிகழவிருப்பதை ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்று இப்போதே விழாவுக்கான முன்னெடுப்புகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

இந்த ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களில் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த படமாக சாதனை படைத்திருக்கும் 'விக்ரம்' படம் நடிகர் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள படம் என்கிறார்கள் திரை விமர்சகர்கள். நடிகர் கமல்ஹாசனின் ஐம்பது ஆண்டுகளுக்கும் அதிமான அவரது திரையுலகப் பயணத்தில், 'விக்ரம்' படம் சாதித்திருக்கும் சாதனை தனிப்பெரும் சாதனை.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'விக்ரம்' படத்தில் நாயகனாக நடிகர் கமல்ஹாசனும் அவருடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். சற்றேறக்குறைய நான்கைந்து ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு 'விக்ரம்' திரைப்படம் வெளியானது.

'விக்ரம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும் திரையுலகினரிடையேயும் அதிகமாகவே இருந்தது. அனைவரது எதிர்பார்ப்பையும் நிஜமாக்கி படம் வெளியான நாள் முதல் சிறப்பான வரவேற்பையும் நெடுநாட்களுக்குப் பிறகு திரையரங்குகளை நிறைத்த படமாகவும் வலம் வந்தது 'விக்ரம்'. அதோடு, இந்தத் திரைப்படம் இதுவரை எந்த ஒரு நேரடித் தமிழ்ப்படமும் செய்யாத வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் கடந்த மார்ச் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் சுமார் 480 கோடி ரூபாய் வசூல் செய்து வசூலில் புதிய சாதனையைப் படைத்தது. மேலும், தமிழகத் திரையரங்குகளில் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு நூறு நாட்களைக் கடந்து ஓடிய முதல் திரைப்படம் என்ற சாதனையையும் அள்ளியது.

இப்படத்தின் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சிறுவனாக இருந்தபோது அப்போதைய 'விக்ரம்' படத்தைப் பார்த்து வியந்தேன். தற்போது புதிய 'விக்ரம்' படத்தை தனது விருப்ப நாயகனான நடிகர் கமல்ஹாசனை நடிக்கவைத்து இயக்கியதில் பெருமிதம் என்று பல்வேறு கட்டங்களில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இந்தநிலையில், 'விக்ரம்' படத்தின் நூறாவது நாள் விழாவைக் கொண்டாட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் ஏழாம் தேதி பிறந்தநாள் விழாவும் 'விக்ரம்' படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவும் இணைத்து கொண்டாடப்படவிருக்கிறது.


இந்த வெற்றிவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நவம்பர் ஏழாம் தேதி மாலை 5 மணிக்கு நிகழவிருக்கிறது. இந்த விழாவில், 'விக்ரம்' படத்தில் பங்காற்றிய கலைஞர்கள், திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் விழா மேடையில் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் யார்யார் என்கிற விவரத்தை மட்டும் இன்னும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Oct 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து