/* */

தனது மேக்கப் மேனை, அமெரிக்காவில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்

Actor Kamal - அமெரிக்காவில் உள்ள தனது ஆஸ்தான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோரை வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்.

HIGHLIGHTS

Actor Kamal | Actor Kamal Hassan
X

அமெரிக்காவில் உள்ள தனது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர், அவரது மகள் நடிகை மெக்கென்சி ஆகியோரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்.

Actor Kamal -நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர். இவர் கமல்ஹாசனின் பிரம்மாண்ட படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர். தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் துவங்க உள்ள நிலையில்தான், மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார் கமல்.

தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள கமல், மைக்கேல் வெஸ்ட்மோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை நடிகை மெக்கென்சி தனது வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக, படம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கொரோனா தொற்று, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் 'RC15' படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஆயத்தமாகிறது படக்குழு.

அந்த வகையில், படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி மீண்டும் துவங்கவுள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார் கமல். எனவே, இந்தியன் 2 படத்தில், மீண்டும் மைக்கேல் வெஸ்ட்மோர் கமலுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Aug 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...