/* */

நடிகர் பாபி சிம்ஹாவின் மகன், மகளுடன் குடும்ப புகைப்படம் வைரல்

Bobby Simha Family Photos-நடிகர் பாபி சிம்ஹாவின் மகன், மகளுடன் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

Bobby Simha Family Photos
X

Bobby Simha Family Photos

Bobby Simha Family Photos

நடிகர் பாபி சிம்ஹா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா, நேரம் படங்களில் வில்லனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ' ஜிகர்தண்டா' படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பாபி சிம்ஹா, தொடர்ந்து உருமீன், பெங்களூரு நாட்கள் , கோ 2 ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் பாபி சிம்ஹா.

உருமீன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மி மேனனை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நடிகை ரேஷ்மி மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றியும், ஸ்கின் டிப்ஸ் போன்றவற்றையும் இன்ஸ்டாவில் பதிவிடுவார். மேலும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகை ரேஷ்மி.

Bobby Simha Family Photos

இந்நிலையில், லேட்டஸ்ட்டாக தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நடிகர் பாபி சிம்ஹா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பாபி சிம்ஹா பிள்ளைகள் இவர்கள், நன்றாக வளர்ந்துவிட்டார்களே என்று கூறி புகழ்ந்து வருகின்றனர்.

பாபி சிம்ஹா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 7ம் தேதி பாபி சிம்ஹா கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது.

இவருக்கு ரசிகர்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரைத்துறைகளிலும் ஏராளமானோர் உள்ளனர். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. தற்போது இவரது மகன் மற்றும் மகளுடன் குடும்பப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 8:40 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...