/* */

நடிப்பில் 'விஸ்வரூபம்'; 10 மொழிகளில் தயாராகும் படத்தில் 13 வேடங்களில் சூர்யா

நடிகர் சூர்யா 13 வேடங்களில் நடிக்கும் படம், 10 மொழிகளில் தயாராகிறது. 13 விதமான வேடங்களில் சூர்யா நடிப்பதால், இப்படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

நடிப்பில் விஸ்வரூபம்; 10 மொழிகளில் தயாராகும் படத்தில் 13 வேடங்களில் சூர்யா
X

நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா தனது 42வது படத்தில், 13 வித்யாசமான கேரக்டர்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

'நவராத்திரி' என்ற படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்து அசத்தினார். அடுத்து, உலகநாயகன் கமல்ஹாசன், 'தசாவதாரம்' படத்தில், வித்யாசமான பத்து வேடங்களில் நடித்து, தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். வழக்கமாக, இரட்டை அல்லது மூன்று வேடங்களில் முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிப்பதுண்டு. இதில் பெரும்பாலும் ஒருவர் தந்தையாகவும், இரண்டு பேர் மகன்களாகவும் இருப்பர். இதுபோல் பல படங்கள் வந்து, வெற்றி பெற்றது உண்டு. சில படங்கள் சராசரியாக கூட ஓடாமல் தோல்வி கண்டதும் உண்டு.


ஆனால், ஒரே படத்தில் பல வேடங்களில் நடிப்பது அந்த நடிகரின் நடிப்பாற்றலை, திறமையை வெளிப்படுத்தும். அவரது கலை பயணத்தில், அது திருப்புமுனையாகவும் அமையும்.

இன்றைய நடிகர்களில் பலரும், நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யவும், நல்ல வேடங்களில் நடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தவும் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் சூர்யா, நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும் சில வேளைகளில் கதாபாத்திரங்கள் சரியாக அமையாமல், அந்த படங்கள் வெற்றி பெறாமல், ஏமாற்றத்தை தந்து விடுகின்றன.

சூர்யா நடித்த படங்களில் உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், 24, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், சில்லுன்னு ஒரு காதல், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று, அயன், ஆறு, வேல், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில், சூர்யா வெவ்வேறு விதமான நடிப்பை வழங்கி ரசிகர்களை அசத்தினார். சமீபத்தில், கமல் நடித்த 'விக்ரம்' படத்தில், க்ளைமாக்ஸ் காட்சியில் 'ரோலக்ஸ்' என்ற வில்லன் கேரக்டரில் வந்து ரசிகர்களை மிரட்டியது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். 'சூர்யா 42' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும்,' சூர்யா 42' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக நடிகை திஷா பத்தானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 2023-ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Updated On: 29 Dec 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...