/* */

இளம் வயதில் மறைந்த துணை நடிகர்; குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்

சமீபத்தில் மறைந்த நடிகர் வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவை நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கிறார்.

HIGHLIGHTS

இளம் வயதில் மறைந்த துணை நடிகர்; குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற விஷ்ணு விஷால்
X

சமீபத்தில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் வைரவன்.

மிக குறைந்த எண்ணிக்கையில், சில படங்களில் நடித்தாலும் சில நடிகர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். பெரிய அளவில் அவர்கள் நடிப்பு பேசப்படும் நிலையில், படத்தில் இல்லாவிட்டாலும் அடையாளம் சொல்லப்பட்டவுடன், 'அட, அந்த நடிகர்தானே?' என, மிக எளிதாக தெரிந்துவிடும் அளவுக்கு, சில நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மறைந்த வைரவன் கூட அப்படி ரசிகர்களால் அறியப்படுபவர் தான்.


இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் 'வெண்ணிலா கபடிக்குழு'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தின் மூலம், அந்த படத்தில் நடித்த பலருக்கு திருப்புமுனை ஏற்பட்டது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால், நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோர் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் வைரவன். இவர் விஷ்ணு விஷால் உடன் 'குள்ளநரி கூட்டம்' படத்திலும் நடித்துள்ளார். 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில், கபடி அணி வீரர்களில் ஒருவராக நடித்திருப்பார். 'குள்ளநரிக்கூட்டம்' படத்தில், போலீஸ் பணிக்கு தேர்வு எழுதும் 'ஹீரோ'வின் நண்பர்களில் ஒருவராக, அவரும் போலீஸ் தேர்வில் கலந்து கொள்வார். இதில், டீ விற்கும் அப்புக்குட்டிக்கும், இவருக்கும் மோதல் ஏற்பட்டு, பின் நண்பர்களாவர்.


கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் வைரவன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவரின் மறைவால் திரையுலகை சேந்த பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இவரின் நெருங்கிய நண்பரான நடிகர் விஷ்ணு விஷால், வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

அது பற்றி மேலும் அவர் பேசுகையில், 'வைரவனுடன் நான், கடந்த ஆறு மாதங்களாக பேசிக்கொண்டுதான் இருந்தேன். என்னால் என்ன முடியுமோ அந்த உதவிகளை நான் செய்து வந்தேன். அவர் மனைவியிடம் 'உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன்' எனவும் கூறியுள்ளேன்.

இதையடுத்து, வைரவனின் குழந்தைகளின் படிப்பு செலவையும் நான் ஏற்க உள்ளேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். மேலும் வைரவன் கடைசியாக, தனக்கு 'நன்றி' என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார் விஷ்ணு விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.


மறைந்த நடிகர் வைரவனுடன் நடித்த காலகட்டத்தில், விஷ்ணு விஷால் அறிமுக நடிகராக மட்டுமே இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் விளங்குகிறார். சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' படம் கூட, விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது.

தன் நிலை உயர்ந்த போதும், பழைய நட்டை மறவாமல், இறந்த நண்பனுக்கு உதவும் மனிதநேயம் கொண்ட விஷ்ணு விஷால் நல்ல மனிதராகவும் பாராட்டைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Dec 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?