/* */

பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி- தனலட்சுமி இடையே மூண்டது சண்டை

Maheshwari And Dhanalakshmi Clashes in Bigg Boss 6 Tamil -பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி- தனலட்சுமி இடையே சண்டை மூண்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

HIGHLIGHTS

பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி- தனலட்சுமி இடையே மூண்டது சண்டை
X

Maheshwari And Dhanalakshmi Clashes in Bigg Boss 6 Tamil -உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தமிழில் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களை கடந்து தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது பிக் பாஸ் ஆறாவது சீசன். ஆரம்பத்தில் மிக கலகலப்பாக சென்று கொண்டிருந்தது பிக் பாஸ் ஆறாவது சீசன் போட்டி. அதற்கு காரணம் நெல்லை தமிழில் எதார்த்தமாக பேசி கலகலப்பை உண்டாக்கினார் பிரபல யூடியுபர் ஜி.பி. முத்து. அவர் தனது மகனுக்கு உடல் நலம் இல்லாததால் அவசியம் நேரில் சென்று பார்க்க வேண்டும் அதனால் என்னை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விடுங்கள் என கண்ணீர் மல்க கமல்ஹாசனிடம் அனுமதி கேட்டார்.

maheshwari and dhanalakshmi clashes in bigg boss 6 tamilஅவரிடம் தனியாக விசாரணை நடத்தினார் பிக் பாஸ் கமல்ஹாசன். அப்போது எனக்கு பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விட எனது மகன் தான் முக்கியம்.. பாசம் என்னை அழைக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதார். இதனை தொடர்ந்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற கமல்ஹாசன் அனுமதி வழங்கி வெளியேற்றினார். அந்த வகையில் ஜி. பி. முத்து மற்றும் சாந்தி ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். மீதி உள்ள 19 பேர் பிக் பாஸ் வீட்டிலேயே குடியிருந்து வருகிறார்கள்.


maheshwari and dhanalakshmi clashes in bigg boss 6 tamilஇவர்களுக்கு நேற்று ஒரு போட்டி நடைபெற்றது. இதற்கு பொம்மை டாஸ்க் என பெயர். இந்த போட்டியில் நடிகை மகேஸ்வரிக்கும் தனலட்சுமிக்கும் இடையே திடீரென சண்டை மூண்டது. போட்டி விதிமுறை என்னவென்றால் ஒரு அட்டைப் பெட்டிக்குள் 19 பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கும்.அந்த 19 பொம்மைகளில் போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். அதை போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு அலமாரியில் வைக்க வேண்டும். இந்த போட்டியில் மற்றவர்களுக்காக நாம் விளையாட வேண்டும் என்பதால் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பேசி வைத்துக்கொண்டு பொம்மை எடுத்துக் கொண்டு ஓடினர்.


maheshwari and dhanalakshmi clashes in bigg boss 6 tamilஇதில் ரச்சிதா, ஷிவின், ஜனனி, அமுதவாணன் தனலட்சுமி ஆகியோர் ஒரு குரூப்பாக சேர்ந்து கொண்டு இவர்களுடைய பொம்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு ஓடியதால் சண்டை மூண்டது. இதையடுத்து மகேஸ்வரி என்ற பெயர் எழுதிய பொம்மையை தனலட்சுமி வைத்துக் கொண்டு அலமாரியின் உள்ளே வைக்காமல் வெளியே நின்று கொண்டிருந்தார். அதேபோல் மகேஸ்வரி ஷிவின் என்று பெயர் எழுதிய பொம்மையை வைத்துக் கொண்டு என் பெயர் எழுதிய பொம்மையை கொண்டு போய் அலமாரியில் வைத்தால் நான் இதை உள்ளே வைப்பேன் என்றார்.ஆனால் தனலட்சுமி மகேஸ்வரியை எப்படியாவது நாமினேஷன் செய்து விட வேண்டும் என விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

maheshwari and dhanalakshmi clashes in bigg boss 6 tamilமகேஸ்வரி நீங்க உள்ள என் பொம்மையை வைக்கவில்லை என்றால் நான் அவுட் ஆகி விடுவேன் என கேட்டு கேட்டுவிட்டு தனலட்சுமி பொம்மையை தராமல் இருந்தார். நேற்றைய ப்ரோமோவில் தனலட்சுமி இது கேம்தான். நான் பர்சனலா தான் பண்றேன். டைரக்டடா நான் நாமினேட் பண்றேன் என்று தனலட்சுமி கூறியது போல் புரமோ வெளியானது. ஆனால் அது எபிசோட்டில் வராததால் இன்றைக்கு சம்பவம் இருக்கு என்று ரசிகர்கள் இன்றைய பிக் பாஸ் 6 எபிசோடை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...