கமல்ஹாசனின் தோல்விக்கும் காரணம் அவர் சிவாஜி போன்ற பெரிய நடிகர் என்பதால் தான்- சாருஹாசன்,சொன்னதுங்க..

நல்ல நடிகராகவே தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கமல்ஹாசனின் தோல்விக்கும் காரணம் அவர் சிவாஜி போன்ற பெரிய நடிகர் என்பதால் தான்- சாருஹாசன்,சொன்னதுங்க..
X

கமல்ஹாசனின் தோல்விக்கும் காரணம் அவர் சிவாஜி போன்ற பெரிய நடிகர் என்பதால் தான்- சாருஹாசன்,சொன்னதுங்க..

நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தலுல நாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஒருத்தர் கூட வெற்றி பெறலை அந்த சேதிதான் எல்லோருக்கும் தெரியுமே.

ரொம்ப கஷ்டப்படடடு கடைசிவரை நம்பிக்கையில் இருந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூட வெற்றி பெறலை அது வேற கதை.

இதனால் கட்சிக்குள் பல குழப்பம் எழுந்ததால் நிர்வாகிகள் சிலர் வெளியேறி போய்க்கிட்டிருக்காய்ங்க அது ஒரு பக்கம்.

இந்நிலையில் இன்றைக்கும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் என்கிற பெரியவர் ம நீ ம தோல்வி குறித்து பரபரப்பு கருத்தினை வெளியிட்டிருக்கதா ஒரு சேதி நம் கவனத்துக்கு வருது. அது இன்னா அப்படின்னு விசாரிச்சா அவர் ஏற்கனவே இதே கமல் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அளித்திருந்த ஒரு பேட்டியிலே, கமல்ஹாசனை விட ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி பரபரக்க வெச்ச அண்ணன் இவர்.

அதையேதான் இப்போது சொல்லி இருக்கிறாராம். ''என் காலத்தில் கமல்ஹாசனை நல்ல நடிகராகவே தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி இருக்கும்போது அரசியலில் அவரை எப்படி ஏற்றுக் கொள்வார்கள். அதனால்தான் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது ஒன்றும் சிவாஜிக்கு நேர்ந்த தோல்வியை விட பெரிய தோல்வி கிடையாது. கமல்ஹாசனின் தோல்விக்கும் காரணம் அவர் சிவாஜி போன்ற பெரிய நடிகர் என்பதால்தானாம்...

சினிமாவிலும் கமல்ஹாசனை முதல் இடத்திற்கு மக்கள் கொண்டு வரவில்லை. அப்பவும் இப்பவும் கமலை விட ரஜினிக்குத்தான் ஐந்து மடங்கு சம்பளம் அதிகம். அவர் படம்தான் வசூலிலும் முதலிடத்தில் இருக்கிறது.

ஒரு வேளை ரஜினி வந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்.'' அப்படீன்னு தெரிவிச்சிருக்காராம்.

அது மட்டுமில்ல கூடவே,இன்னுமொரு அஸ்திரத்தையும் வீசினாரு '' இது திராவிட நாடு. இங்கே பிராமண சமூகத்திற்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது. கமல்ஹாசனின் தோல்விக்கு சாதியும் ஒரு காரணம்தான்'' என்றும் சொல்லி இருக்காராம். அப்படின்னு சேதி.

Updated On: 12 May 2021 4:32 PM GMT

Related News

Latest News

 1. தாராபுரம்
  திருப்பூர்: முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
 2. விளையாட்டு
  டி20 உலக கோப்பை : பாகிஸ்தான் அபார வெற்றி
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது
 4. திருப்பத்தூர்
  திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 5 பேர்...
 5. திருக்கோயிலூர்
  கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர்...
 7. மயிலாடுதுறை
  ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
 9. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. காஞ்சிபுரம்
  பொதுமக்கள் ஆறுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் :ஸ்ரீ...