ஏழை சிறுமியின் இதய ஆபரேஷனுக்கு ரூ. 1.5 லட்சம் கொடுத்த பிரசன்னா

ஏழை சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் பிரசன்னா

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஏழை சிறுமியின் இதய ஆபரேஷனுக்கு ரூ. 1.5 லட்சம் கொடுத்த பிரசன்னா
X

கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் கூட அசத்தி வருபவர் பிரசன்னா. அண்மையில் நடந்த படப்பிடிப்பின்போது ஒரு தம்பதி பிரசன்னாவை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அருமையான உணவை சமைத்து தன் அம்மா நீனா குப்தாவை அசத்தும் மகள் மசாபா!

அப்பொழுது அவர்கள் தங்கள் மகளுக்கு திடீர் என்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பது குறித்து பிரசன்னாவிடம் தெரிவித்துள்ளனர். ஏழைகளான தங்களால் அவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று பிரசன்னாவிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் நிலைமையை புரிந்து கொண்ட பிரசன்னா அந்த சிறுமியை அனுமதித்துள்ள மருத்துவமனைக்கு போன் செய்து விபரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக ரூ. 1.5 லட்சம் கொடுத்திருக்கிறார் பிரசன்னா.

இவ்வளவு பெரிய தொகையை பிரசன்னா கொடுத்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. பிரசன்னாவுக்கு தங்கமான மனசு, அவரும், குடும்பத்தாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் மனதார வாழ்த்தியுள்ளனர்.

எந்த மாமியும் நம்ம மாமி இல்லை: பிரசன்னா யாரை சொல்றார்னு தெரியுதா?

பிரசன்னா ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். சினிமா, நாட்டு நடப்புகள் குறித்து ட்வீட் செய்வார். அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை பார்த்த தமிழக மக்கள் நம்ம மாமி துணை அதிபர் ஆகிறார் என்று ட்வீட் செய்தார்கள். அதை பார்த்த பிரசன்னாவோ, எந்த மாமியும் நம்ம மாமி இல்லை என்றார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதியும், சிம்புவும் தலா ரூ. 1 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த தம்பதியின் மகளுக்கு பிரசன்னா உடனே உதவி செய்தது குறித்து தான் ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Updated On: 2020-11-29T01:36:04+05:30

Related News